×

நேரடி அரசியலில் களமிறங்கினார் பிரியங்கா காந்தி; எடுத்த எடுப்பிலேயே முக்கிய பதவி!

சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பதவி வழங்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பதவி வழங்கப்பட்டுள்ளது. தேசிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மகளும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி, இதுநாள் வரை எந்த கட்சிப் பதவிக்கும் வராமல் இருந்தார். இருப்பினும், தாய் சோனியா மற்றும் சகோதரர் ராகுலுக்காக
 

சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி: சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

தேசிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மகளும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி, இதுநாள் வரை எந்த கட்சிப் பதவிக்கும் வராமல் இருந்தார்.

இருப்பினும், தாய் சோனியா மற்றும் சகோதரர் ராகுலுக்காக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருக்கும் இவர், நேரடி அரசியல் கால் பதிக்காமலே இருந்தார். இந்த நிலையில், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தியை நியமனம் செய்து அக்கட்சியின் தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், உத்தரபிரதேச கிழக்கு பிராந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா செயல்படுவார். 

உத்திரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று, யோகி ஆதித்தியநாத் முதல்வராக இருந்து வருகிறார். இந்நிலையில், உ.பி காங்கிரஸை பலப்படுத்தவே பிரியங்கா நியமனம் செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், பிரியங்கா காந்திக்கு பதவி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.