×

நீங்க எல்லாம் வங்கின்னு சொல்லக் கூடாது! தடை விதிக்க தயாராகும் மத்திய அரசு

நகர்புற கூட்டுறவு வங்கிகள் அவற்றின் பெயரோடு வங்கி என்ற பெயரை வைப்பதற்கு மத்திய அரசு விரைவில் தடை விதிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின்கீழ், நகர்புற கூட்டுறவு வங்கிகள் (யு.சி.பி.) பதிவு செய்யப்படுகின்றன. நகர்புற கூட்டுறவு வங்கிகள் தானாகவே சிறு நிதி வங்கிகளாக மாறி கொள்ளலாம். ஆனால் கடன் வழங்க கூடாது என 2018 செப்டம்பரில் ரிசர்வ் அனுமதி அளித்தது. இதனையடுத்து யு.சி.பி. நிறுவனங்கள் சிறு நிதி வங்கிகளாக மாறும் மற்றும்
 

நகர்புற கூட்டுறவு வங்கிகள் அவற்றின் பெயரோடு வங்கி என்ற பெயரை வைப்பதற்கு மத்திய அரசு விரைவில் தடை விதிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின்கீழ், நகர்புற கூட்டுறவு வங்கிகள் (யு.சி.பி.) பதிவு செய்யப்படுகின்றன. நகர்புற கூட்டுறவு வங்கிகள் தானாகவே சிறு நிதி வங்கிகளாக மாறி கொள்ளலாம். ஆனால் கடன் வழங்க கூடாது என 2018 செப்டம்பரில் ரிசர்வ் அனுமதி அளித்தது. இதனையடுத்து யு.சி.பி. நிறுவனங்கள் சிறு நிதி  வங்கிகளாக மாறும் மற்றும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வரும் நடவடிக்கையிலும் இறங்கின. ஆனால் அவற்றின் முயற்சி தோல்வியில்தான் முடிவடைந்தன.

இந்த சூழ்நிலையில் பி.எம்.சி. வங்கி மோசடி வெளிவந்தது மற்றும் நகர்புற கூட்டுறவு வங்கிகள் தங்களது பெயரில் வங்கிகள் என பெயர் சேர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் மத்திய அரசிடம் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து, சட்டத்தை புதுப்பிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இறங்கியுள்ளது.

இந்நிலையில், நகர்புற கூட்டுற வங்கிகள் அவற்றின் பெயரோடு வங்கி என்ற பெயரை சேர்க்க மத்திய அரசு விரைவில் தடை விதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் வங்கிகளையும், நகர்புற கூட்டுறவு வங்கிகளையும் வேறுபடுத்திகாட்டும் நோக்கிலும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.