×

நாளை விளக்கேற்றும்போது இதெல்லாம் செஞ்சுடாதீங்க! பீதியை கிளப்பும் மத்திய அரசு

பிரதமர் மோடி நேற்று வீடியோ மூலம் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சவாலுக்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி.அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். ஊரடங்கு மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி. இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணையுங்கள். வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன்,
 

பிரதமர் மோடி நேற்று வீடியோ மூலம் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சவாலுக்கு  எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி.அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். ஊரடங்கு மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி. இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணையுங்கள். வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

 

 

இந்நிலையில் நாளை மெழுகுவர்த்தி, அகல்விளக்கை ஏற்றுவதற்கு முன் ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்த வேண்டாம் என்றும், கைகளை சோப்பு போட்டு மட்டும் கழுவி விட்டு விளக்கேற்றும்படி இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட பொது ஒளிபரப்பு சேவை நிறுவனமான பிரச்சார் பாரதி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.