×

நான் வாழ்ந்தாலும் இறந்தாலும் உங்களுடைய எண்ணங்களை உலகிற்கு வெளிப்படுத்துவேன்: கங்கனா ஆவேசம்

பாலிவுட் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது குறித்து நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து கங்கனாவுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அவர் மும்பைக்குள் வர கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. இதை தொடர்ந்து மும்பையில் கங்கனாவின் மணிகர்ணிகை அலுவலகம் சட்ட
 

பாலிவுட் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது குறித்து நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து கங்கனாவுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அவர் மும்பைக்குள் வர கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. இதை தொடர்ந்து மும்பையில் கங்கனாவின் மணிகர்ணிகை அலுவலகம் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியதுடன் கட்டடத்தை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இன்று இடிக்க துவங்கினர். இதனால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

https://twitter.com/KanganaTeam/status/1303685184403857409

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில், “உத்தவ் தாக்கரே மற்றும் கரண் ஜோஹர் கேங் என் அலுவலகத்தையும் வீட்டையும் இடித்துவிட்டார்கள். தயவு செய்து வந்து என் முகத்தையும் உடலையும் சிதைத்து விடுங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உலகம் தெளிவாகக் காண வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நான் வாழ்ந்தாலும் இறந்தாலும் உங்களுடைய எண்ணங்களை உலகிற்கு வெளிப்படுத்துவேன். இன்று என் வீட்டை இடித்துவிட்டார்கள். இதேபோன்றதொரு நிலை நாளை அது உங்களுக்கும் ஏற்படலாம். எத்தனையோ அரசாங்கங்கள் வந்து போகிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் நீங்கள் அடாவடித்தனத்தையும், வன்முறையையும் வழக்கமாக வைத்துள்ளீர். இன்று ஒருவருக்கு நடக்கும் துரோகம் நாளை ஆயிரக்கணக்கானோருக்கு நடக்கலாம். எனவே இப்போதே விழித்துக்கொள்ளுங்கள்!” எனபதிவிட்டுள்ளார்.