×

நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு :பிரதமர் மோடி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பிரப்பிக்கபட்ட ஊரடங்கு இன்றுடன் முடிகிறது. இருப்பினும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை ஏப்ரல் 30 வரைக்கும் நீடித்துள்ளது. இந்நிலையில் இன்று 4 ஆவது முறையாக நாட்டு மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி. ” கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம் .சவால் நிறைந்தது வாழ்க்கை என்பதற்கு சட்ட மேதை அம்பேத்கரின் வாழ்க்கையே உதாரணம். கொரோனாவை கட்டுபடுத்த மக்கள் ராணுவ வீரர்கள் போல செயல்பட்டு வருகிறீர்கள். ஊரடங்கு
 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பிரப்பிக்கபட்ட ஊரடங்கு இன்றுடன் முடிகிறது. இருப்பினும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை  ஏப்ரல்  30 வரைக்கும் நீடித்துள்ளது. 

இந்நிலையில் இன்று 4 ஆவது முறையாக நாட்டு மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி. ” கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம் .சவால் நிறைந்தது வாழ்க்கை என்பதற்கு சட்ட மேதை அம்பேத்கரின் வாழ்க்கையே உதாரணம். கொரோனாவை கட்டுபடுத்த மக்கள் ராணுவ வீரர்கள் போல செயல்பட்டு வருகிறீர்கள்.  ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை என்னால் உணர முடிகிறது.  மக்கள் ஒத்துழைப்பு காரணமாக பெரிய இழப்பை தடுத்துள்ளோம். 21 நாட்கள் ஊராடங்கால் கொரோனாவை கட்டுபடுத்தி இருக்கிறோம்.  உலக நாடுகளை ஒப்பிடும் போது கொரோனா தடுப்பில் இந்தியா சிறந்து விளங்குகிறது” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊராடங்கை நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.