×

நாங்கள் அவரை பின் தொடர்கிறோம்: இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகும் அபிநந்தனின் மீசை!

இந்திய விமானி அபிநந்தனின் மீசை தற்போது இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது. பெங்களூரு: இந்திய விமானி அபிநந்தனின் மீசை தற்போது இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து நடந்த தொடர் தாக்குதல்களில், இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் சிறை பிடித்தது. ஆனால் இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால், அபிநந்தனை எந்த நிபந்தனையும் இன்றி விடுவித்தது. இதையடுத்து இந்திய விமானப்படைக்கு இந்தியர்கள்
 

இந்திய விமானி அபிநந்தனின் மீசை தற்போது இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகி  வருகிறது.

பெங்களூரு: இந்திய விமானி அபிநந்தனின் மீசை தற்போது இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகி  வருகிறது.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து நடந்த தொடர் தாக்குதல்களில், இந்திய விமானி அபிநந்தனை  பாகிஸ்தான் சிறை பிடித்தது. ஆனால்  இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால், அபிநந்தனை எந்த நிபந்தனையும் இன்றி விடுவித்தது. இதையடுத்து இந்திய விமானப்படைக்கு இந்தியர்கள் ஏராளமானோர் வாழ்த்துத் தெரிவித்தனர். அதில் குறிப்பாக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் அபிநந்தன் எந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம்பெற்றாரோ, அதே அளவு அவரது மீசையும் பிரபலமாகி விட்டது.  இளைஞர்கள் பலர் அதே பாணியில் மீசையை வளர்க்க தொடங்கி அதை டிரெண்டாக்கி வருகின்றனர். கர்நாடகாவின் பெங்களூரு நகரில் வசித்து வருபவர் முகமது சந்த்.  இவர் விமானி அபிநந்தன் போன்று மீசை வைத்து உள்ளார்.  இதுபற்றி கூறிய சந்த், ‘நான் அவரது ரசிகன்.  நாங்கள் அவரை பின்தொடருகிறோம்.  அவரது ஸ்டைலை நான் விரும்புகிறேன்.  அவரே உண்மையான ஹீரோ.  மகிழ்ச்சியாக இருக்கிறது’ என கூறியுள்ளார்.

இதே போல் சென்னை, கோவை, மும்பை என பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் தற்போது அபிநந்தனின் மீசையை போல் தங்களது மீசையையும் திருத்தி கம்பீரமாக சுற்றி வருகின்றனர்.