×

நவம்பர் வரை ரேஷன்கடையில் இலவச பொருட்கள் வழங்கப்படும்! பிற நாட்டுக்கு நம்ம நாடு பரவாயில்லை- பிரதமர் மோடி

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருகிறது மற்றும் எல்லையில் இந்தியா-சீனா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்ட முடக்கத்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நாடு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது, பொதுமுடக்கத்தின் 2 ஆம் கட்டமான unlock 2.0 தொடங்கிவிட்டது. பொதுமுடக்கத்தை பல
 

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருகிறது மற்றும் எல்லையில் இந்தியா-சீனா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்ட முடக்கத்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நாடு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது, பொதுமுடக்கத்தின் 2 ஆம் கட்டமான unlock 2.0 தொடங்கிவிட்டது. பொதுமுடக்கத்தை பல இடங்கள் சரியாக பின்பற்றவில்லை. கொரோனாவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழை தொடங்கிவிட்டது. இந்த காலத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

பொதுமுடக்க தளர்வுகள் அளித்தாலும் முன்பைவிட தற்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறிய தவறுக்கு கூட மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும். அரசின் விதிமுறைகளை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். நாட்டில் யாரும் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் இல்லை. அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும். கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை இலவசமாக தானியங்கள் வழங்கப்படும். 5 கிலோ அரிசி அல்லது கோதுமையுடன் ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும். நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது. கொரோனா விதிமீறலுக்காக ஒரு நாட்டின் பிரதமருக்கு ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் முதல் சாமானியர் வரை அனைவருக்கும் நமது நாட்டிலும் ஒரே விதிதான்” எனக்கூறினார்.