×

நண்பணின் உடலை நல்லடக்கம் செய்ய 3,000 கிமீ பயணம் செய்த இளைஞர் !

மிசோராம் மாநிலத்தை சேர்ந்த விவியன் லால்ரெம்சங்கா சென்னையில் ஓட்டல் நிர்வாகம் படித்துவிட்டு சான்றிதழ் பெறுவதற்காக காத்திருந்தார். விரைவில் ஒரு ஓட்டல் தொடங்கவும் திட்டமிட்டிருந்தார். சென்னையில் உயிரிழந்த மிசோராம் மாநில இளைஞரின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக அவரது நண்பர் 3,000 கிலோ மீட்டர் பயணம் செய்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. மிசோராம் மாநிலத்தை சேர்ந்த விவியன் லால்ரெம்சங்கா சென்னையில் ஓட்டல் நிர்வாகம் படித்துவிட்டு சான்றிதழ் பெறுவதற்காக காத்திருந்தார். விரைவில் ஒரு ஓட்டல் தொடங்கவும் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில்
 

மிசோராம் மாநிலத்தை சேர்ந்த விவியன் லால்ரெம்சங்கா சென்னையில் ஓட்டல் நிர்வாகம் படித்துவிட்டு சான்றிதழ் பெறுவதற்காக காத்திருந்தார். விரைவில் ஒரு ஓட்டல் தொடங்கவும் திட்டமிட்டிருந்தார்.

சென்னையில் உயிரிழந்த மிசோராம் மாநில இளைஞரின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக அவரது நண்பர் 3,000 கிலோ மீட்டர் பயணம் செய்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. 
மிசோராம் மாநிலத்தை சேர்ந்த விவியன் லால்ரெம்சங்கா சென்னையில் ஓட்டல் நிர்வாகம் படித்துவிட்டு சான்றிதழ் பெறுவதற்காக காத்திருந்தார். விரைவில் ஒரு ஓட்டல் தொடங்கவும் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் மாரடைப்பால் திடீரென காலமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர நண்பர் ரபேல் மல்ச்சன்ஹிமா, என்ன செய்வதென தெரியாமல் தவித்தார். ஊரடங்கு காரணமாக அவரது உடலை சொந்த ஊருக்கு எப்படி எடுத்து செல்வது என பலரின் உதவியை நாடினார்.

இதற்கிடையே இறந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் சென்னையிலேயே இறுதிச் சடங்கு செய்ய பரிந்துரைக்கப்பட்டது. காரணம் போக்குவரத்து வசதி இல்லாமல் அவரது உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல முடியாது. ஆனால் அவரது நண்பர் 28 வயதான ரபேல் மல்ச்சன்ஹிமா எப்படியாவது சொந்த ஊருக்கு உடலை எடுத்து செல்ல வேண்டும் என விரும்பினார். பின்னர் மிசோராம் அரசாங்கமும், சென்னை மிசோ நலச்சங்கமும் உடலை கொண்டு செல்ல அந்த இளைஞருக்கு உதவின. 

பின்னர் சென்னையில் இருந்து ஏப்ரல் 25ம் தேதி ஆம்புலன்ஸ் புறப்பட்டது. செல்லும் வழியெல்லாம் ஆம்புலன்ஸ் போலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. உணவங்கள் எதுவும் இல்லாமல் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டனர். நான்கு நாட்களுக்கு பிறகு கடைசியாக அசாம் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் ஒருவழியாக குடும்பத்தாரிடம் உடலை ஒப்படைத்தார் இளைஞர். அதற்கு உறவினர்களும் கிராம பொதுமக்களும் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தனர். இந்த விஷயத்தை பாராட்டி மிசோராம் முதலமைச்சரும் டிவிட் செய்துள்ளார். தற்போது லால்ரெம்சங்கா கல்லறையில் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரை கொண்டு சென்ற நண்பர் மல்ச்சன்ஹிமா தனிமைப்படுத்ப்பட்டுள்ளார்.