×

நடுவானில் வெடிகுண்டு என மிரட்டல் விடுத்த பெண் பயணி! கொல்கத்தாவில் அவசரமாக தரையிறங்கிய ஏர்ஏசியா விமானம்…

ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. மேலும் கொல்கத்தா விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு 9.57 மணிக்கு ஏர்ஏசியாவின் பயணிகள் விமானம் 15316 பயணிகளுடன் மும்பைக்கு கிளம்பி சென்றது. நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது மோகினி மொண்டல் என்ற 25 வயதான பெண் பயணி தன்
 

ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. மேலும் கொல்கத்தா விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு 9.57 மணிக்கு ஏர்ஏசியாவின் பயணிகள் விமானம் 15316 பயணிகளுடன் மும்பைக்கு கிளம்பி சென்றது. நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது மோகினி மொண்டல் என்ற 25 வயதான பெண் பயணி தன் உடம்பில் வெடிகுண்டுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அவற்றை எந்தநேரத்திலும் வெடிக்க செய்து விடுவேன் என்றும் இந்த தகவலை விமான பைலட்டுக்கு தெரிவிக்கும்படி விமான உதவியாளரிடம் பெண் கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த விமான உதவியாளர் பதறியடித்து அந்த பெண் கூறியதை பைலட்டுக்கு தெரிவித்தார். இதனையடுத்து விமான பைலட் விமானத்தை கொல்கத்தாவுக்கு திரும்ப முடிவு செய்தார். உடனை கொல்கத்தா விமான போக்குவரத்து கட்டுபாட்டுளாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல்கிடைத்தவுடன் கொல்கத்தா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் சுமார் இரவு 11 மணிக்கு முழு அவசர நிலையை அறிவித்தார். 

அந்த விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, இரவு 11.46 மணி அளவில்  தனிமையான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது போன்ற அச்சுறுத்தல்கள் வரும்போது பின்பற்றப்படும் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் பயணியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். மேலும் அந்த விமானத்தை அதிகாரிகள் முழுமையாக சோதனை செய்தனர் என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.