×

நடனமாடி போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் கல்லூரி மாணவி!

மத்திய பிரதேசத்தில் எம்.பி.ஏ படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் நடனமாடிக்கொண்டே போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் எம்.பி.ஏ படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் நடனமாடிக்கொண்டே போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. . புனேவைச் சேர்ந்த சுபி ஜெயின்(23) இந்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ படித்து வருகிறார். சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும், தலைக்கவசம் மற்றும்
 

மத்திய பிரதேசத்தில் எம்.பி.ஏ படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் நடனமாடிக்கொண்டே போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. 

மத்திய பிரதேசத்தில் எம்.பி.ஏ படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் நடனமாடிக்கொண்டே போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.

.

புனேவைச் சேர்ந்த சுபி ஜெயின்(23) இந்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ படித்து வருகிறார். சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை வலியுறுத்தி இன்று அவர் விழிப்புணர்வு மேற்கொண்டார்.

அதனொரு பகுதியாக இந்தூரில் சாலையின் நடுவே நின்றுகொண்ட அவர், ஆடல் பாடலுடன் போக்குவரத்தை சீர் செய்தது வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரஞ்சித் சிங் என்ற போக்குவரத்து காவலர் மைக்கேல் ஜாக்சன் போல் நடனம் ஆடி டிராபிக்கை சரி செய்தது குறிப்பிடதக்கது.