×

தொடர்கதையாகும் தமிழகத்தின் 69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்குகள் விவகாரம்!

தமிழகத்தின் 69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு சாதாரணமாகப் பெறப்படவில்லை. இதற்காக தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டு, ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இந்திய அரசியல் சாசனம் 31பி, 31 சி பிரிவுகளின் கீழ் 9ஆவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டது. இந்த இடஒதுக்கிட்டை எதிர்த்து வழக்குகள் தொடரப்படுவதும், உச்ச நீதிமன்றம் அதை நிராகரிப்பதும் தொடர்கதையாக இருக்கிறது. தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர்
 

தமிழகத்தின் 69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு சாதாரணமாகப் பெறப்படவில்லை. இதற்காக தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டு, ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இந்திய அரசியல் சாசனம் 31பி, 31 சி பிரிவுகளின் கீழ் 9ஆவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டது. இந்த இடஒதுக்கிட்டை எதிர்த்து வழக்குகள் தொடரப்படுவதும், உச்ச நீதிமன்றம் அதை நிராகரிப்பதும் தொடர்கதையாக இருக்கிறது.

தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் சார்பாக அவரின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு விசாரித்துவருகிறது. 69% இடஒதுக்கீடு முறையால் பொதுப் பட்டியல் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக அவருக்காக ஆஜரான வழக்கறிஞர் சிவபாலமுருகன் இன்று வாதிட்டார். இதையடுத்து தமிழக அரசு இரு வாரங்களுக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.