×

தேர்தல் வெற்றி நேர்த்திக்கடன்-ஸ்மிரிதி இராணியுடன் கோவிலுக்குச் சென்ற பாலிவுட் பிரபலம்!

கோவிலில் இராணியுடன் அவருடைய நெருங்கிய தோழி ஏக்தா கபூர் தன்னுடைய நான்கு மாத குழந்தை ரேவியுடன் தரிசனம் பெற சென்றிருக்கின்றனர். ஏக்தா கபூரை தெரியாதவர்களுக்காக, தமிழில் சின்னத்திரையில் ராதிகா எப்படி கொடிகட்டி பறக்கிறாரோ அதைவிட பலமடங்கு இந்தி சின்னத்திரை உலகில் வெற்றிகரமான தயாரிப்பாளர். இன்னும் சொல்லப்போனால், இராணிக்கு பெரும் புகழ் தேடித்தந்த நிகழ்ச்சியை தயாரித்தவரும் இந்த கபூரே. காங்கிரஸின் கோட்டையான அமேதி தொகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையே தோற்கடித்து முதன்முறையாக மக்களவை உறுப்பினராக பதவியேற்க இருக்கிறார்
 

கோவிலில் இராணியுடன் அவருடைய நெருங்கிய தோழி ஏக்தா கபூர் தன்னுடைய நான்கு மாத குழந்தை ரேவியுடன் தரிசனம் பெற சென்றிருக்கின்றனர். ஏக்தா கபூரை தெரியாதவர்களுக்காக, தமிழில் சின்னத்திரையில் ராதிகா எப்படி கொடிகட்டி பறக்கிறாரோ அதைவிட பலமடங்கு இந்தி சின்னத்திரை உலகில் வெற்றிகரமான தயாரிப்பாளர். இன்னும் சொல்லப்போனால், இராணிக்கு பெரும் புகழ் தேடித்தந்த நிகழ்ச்சியை தயாரித்தவரும் இந்த கபூரே.

காங்கிரஸின் கோட்டையான அமேதி தொகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையே தோற்கடித்து முதன்முறையாக மக்களவை உறுப்பினராக பதவியேற்க இருக்கிறார் ஸ்மிரிதி இராணி. தேர்தல் வெற்றிக்காக மும்பையில் புகழ்பெற்றா சித்தி வினாயகர் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக 14 கிலோ மீட்டர் தூரத்தை வெறுங்காலுடன் நடந்து சென்று செலுத்தி இருக்கிறார். வேண்டுதல் பெரியது. ஆக, நேர்த்திக்கடனும் பெரியதாகதானே இருக்கும்!

கோவிலில் இராணியுடன் அவருடைய நெருங்கிய தோழி ஏக்தா கபூர் தன்னுடைய நான்கு மாத குழந்தை ரேவியுடன் தரிசனம் பெற சென்றிருக்கின்றனர். ஏக்தா கபூரை தெரியாதவர்களுக்காக, தமிழில் சின்னத்திரையில் ராதிகா எப்படி கொடிகட்டி பறக்கிறாரோ அதைவிட பலமடங்கு இந்தி சின்னத்திரை உலகில் வெற்றிகரமான தயாரிப்பாளர். இன்னும் சொல்லப்போனால், இராணிக்கு பெரும் புகழ் தேடித்தந்த நிகழ்ச்சியை தயாரித்தவரும் இந்த கபூரே.

அந்நாளில் இருந்தே வயது வித்தியாசமின்றி இருவரும் நெருங்கிய தோழிகள். தேர்தல் பரப்புரையின்போதும், வெற்றிச் செய்தி கிடைத்தபின்னும் இராணியின் வெற்றியை தன் குடும்ப வெற்றியாக கருதி கொண்டாடியவர் கபூர். இப்போது இருவரும் கோவிலுக்கு சென்று திரும்பியதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஏக்தா கபூர்.