×

தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல்: 5 பேர் பலி

சத்தீஸ்கரில் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர் ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள பாசிலி பகுதியில், மார்க்கெட்டிற்கு சென்று விட்டு திரும்பிய மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை ஏற்றி வந்த பேருந்தை குறி வைத்து மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் மற்றும் பொதுமக்கள்
 

சத்தீஸ்கரில் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள பாசிலி பகுதியில், மார்க்கெட்டிற்கு சென்று விட்டு திரும்பிய மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை ஏற்றி வந்த பேருந்தை குறி வைத்து மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் மற்றும் பொதுமக்கள் நன்கு பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அந்த பகுதியில் வீரர்கள் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 9 நாட்களில் மாவோயிஸ்ட்கள் நடத்தும் 2-வது தாக்குதல் இதுவாகும். கடந்த மாதம் 30-ம் தேதி நடந்த தாக்குதலில் 2 வீரர்கள் மற்றும் தூர்தர்சன் ஒளிப்பதிவாளர் ஆகியோர் உயிரிழந்தனர்.

சத்தீஷ்காரில் நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பதும், பிரதமர் மோடி நாளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள ஜக்தல்பூர் எனும் இடத்தில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.