×

தெலங்கானாவில் மே.7 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு!

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 23லட்சத்து 46 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மேல் குணமடைந்துள்ளனர். ஒ கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 23லட்சத்து 46 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மேல் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 61 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கினாலும் தற்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை
 

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 23லட்சத்து 46 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில்  6 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மேல் குணமடைந்துள்ளனர். ஒ

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 23லட்சத்து 46 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில்  6 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மேல் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 61 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கினாலும் தற்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. 

இந்தியாவில்  கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  மே 3 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்தது. 519 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் தெலங்கானாவில் 605 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18 பேர் உயிரிழந்துள்ளனர்,மேலும் 186 பேர் குணமடைந்துள்ளனர். தெலங்கானாவில் இன்று மட்டும் 43 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மே. 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தெலங்கானாவில் மே. 7 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.