×

தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்….டாக்டரை தாக்கி கொரோனா வைரஸ் நோயாளியை அழைத்து சென்ற நபர்….

தெலங்கானாவில் மருத்துவமனையில் டாக்டரை தாக்கி கொரோனா வைரஸ் நோயாளியை அவருடன் வந்த உதவியாளர் அழைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிரபலமான ஒஸ்மேனியா பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளியை அவரது உதவியாளர் டாக்டரை தாக்கி விட்டு நோயாளியை அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒஸ்மேனியா பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் நாகேந்தர் கூறியதாவது: நுரையீரல் தொற்று காரணமாக நேற்று
 

தெலங்கானாவில் மருத்துவமனையில் டாக்டரை தாக்கி கொரோனா வைரஸ் நோயாளியை அவருடன் வந்த உதவியாளர் அழைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிரபலமான ஒஸ்மேனியா பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளியை அவரது உதவியாளர் டாக்டரை தாக்கி விட்டு நோயாளியை அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒஸ்மேனியா பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் நாகேந்தர் கூறியதாவது:

நுரையீரல் தொற்று காரணமாக நேற்று முன்தினம் ஒரு நோயாளி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோயாளி தனது நோய் தொடர்பான எந்தவிவரங்களை மருத்துவர்களிடம் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து நோயாளிக்கு கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து பரிசோதனைக்காக அவரிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு அவை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.

பின் அவர் தனிமை வார்டுக்கு மாற்றப்பட்டார். நேற்று காலையில் நோயாளியை தனிமை வார்டில் வைத்திருப்பது தொடர்பாக அவரது உதவியாளர் ஜூனியர் டாக்டருடன் வாக்குவாதம் செய்ததோடு அவரை தாக்கி விட்டு நோயாளியை அழைத்து சென்றார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நோயாளியின் மாதிரிகளை பரிசோதனை முடிவுகள் அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். தகவல் அறிந்தவுடன் போலீசார் நோயாளி, நோயாளியின் குடும்பத்தினர் மற்றும் டாக்டரை தாக்கிய உதவியாளர் ஆகியோரை கண்டுபிடித்து அவர்களை வேறு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் மட்டுமே தாங்கள் தனிமைப்படுத்தபடுகிறோம் என்பதை கோரோனா வைரஸ் நோயாளிகள் உணராதவரை இது போன்ற முட்டாள்தனமான சம்பவங்கள் தொடரும் என சிலர் தெரிவித்தனர்.