×

தெரு விலங்குகளை கவனித்து கொள்வது நம் கடமை…. உணவுக்காக அது நம்மை சார்ந்து உள்ளது…. பிரதமர் மோடி…

தெரு விலங்குகளை கவனித்து கொள்வது நமது கடமை. அவை உணவுக்காக நம்மை சார்ந்து உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதி மக்களிடம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்துரையாடினார். அப்போது மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முடக்கத்தால் நாட்டு மக்கள் மட்டும் கஷ்டங்களை எதிர்கொள்ளவில்லை, தெரு விலங்குகளும் எதிர்கொள்கின்றன. மக்களாகிய நமக்கு தெரியும் இந்த கடினமான நேரங்களில் மனிதர்கள் மட்டும் பிரச்சினைகளை எதிர்கொள்ள போவதில்லை,
 

தெரு விலங்குகளை கவனித்து கொள்வது நமது கடமை. அவை உணவுக்காக நம்மை சார்ந்து உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதி மக்களிடம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்துரையாடினார். அப்போது மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முடக்கத்தால் நாட்டு மக்கள் மட்டும் கஷ்டங்களை எதிர்கொள்ளவில்லை, தெரு விலங்குகளும் எதிர்கொள்கின்றன. 

மக்களாகிய நமக்கு தெரியும் இந்த கடினமான நேரங்களில் மனிதர்கள் மட்டும் பிரச்சினைகளை எதிர்கொள்ள போவதில்லை, உணவுக்காக நம்மை சார்ந்து இருக்கும் தெரு விலங்குகளும் அதிகம் பாதிக்கப்படும். அவசியமான இந்த நேரத்தில் நமது குடியிருப்பு அருகே உள்ள பகுதிகளில் உள்ள எந்தவொரு விலங்குகளுக்கும் உணவு வழங்குவதை உறுதி செய்யவேண்டும்.  

மருத்துவர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் பணியாளர்களிடம் பாகுபாடு காட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.