×

தென்மேற்கு பருவமழை சராசரி அளவில் இருக்கும்; இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்மேற்கு பருவமழைக் காலம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலமாகும். நாடு முழுவதும் சுமார் 75 சதவீதத்துக்கும் ஆதிகமான பகுதிகள் தென்மேற்கு பருவமழைக் காலத்தின் மூலம் மழையை பெறுகின்றன புதுதில்லி: நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை சராசரி அளவில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழைக் காலம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலமாகும். நாடு முழுவதும் சுமார் 75 சதவீதத்துக்கும் ஆதிகமான பகுதிகள் தென்மேற்கு பருவமழைக்
 

தென்மேற்கு பருவமழைக் காலம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலமாகும். நாடு முழுவதும் சுமார் 75 சதவீதத்துக்கும் ஆதிகமான பகுதிகள் தென்மேற்கு பருவமழைக் காலத்தின் மூலம் மழையை பெறுகின்றன

புதுதில்லி: நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை சராசரி அளவில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழைக் காலம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலமாகும். நாடு முழுவதும் சுமார் 75 சதவீதத்துக்கும் ஆதிகமான பகுதிகள் தென்மேற்கு பருவமழைக் காலத்தின் மூலம் மழையை பெறுகின்றன.

பொதுவாக நாட்டின் தென்கோடியில் மே மாத இறுதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழையானது, நாட்டின் உள்பகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஜூலை மாத நடுவில் நாடு முழுவதும் பரவும். செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை நாட்டின் வடமேற்கு எல்லையில் இருந்து தெற்கு பகுதியை நோக்கி படிப்படியாக குறையும்.

இந்நிலையில், நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை சராசரி அளவில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் 96 சதவீதம் மழைப்பொழிவு இருக்கும் என தெரிவித்துள்ள வானிலை மையம், நடப்பாண்டில் அதிகமாகவோ அல்லது குறைவான அளவிலோ இருக்க வாய்ப்பில்லை எனவும், சராசரியாக இருக்கவே வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் தாமதமாக தொடங்கிய வடகிழக்கு பருவமழை கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி நிறைவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், இயல்பை விட 24 சதவீதம் குறைவாகவே பெய்தது. வடகிழக்கு பருவ மழை காலத்தில் 4 புயல்கள் உருவாகின. அவற்றில் ஈரப்பதம் குறைவாக இருந்ததால் மழை இல்லை. கஜா புயல் மட்டுமே மழைக்கு சாதகமாக இருந்தது. கஜா தவிர்த்து, மற்ற 3 புயல்கள் திசைமாறி நகர்ந்து சென்று விட்டதால் மழை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

இந்திய ராணுவப்படையை கவுரவிக்க பாகிஸ்தான் பாடலை காப்பியடித்த பாஜக எம்.எல்.ஏ!