×

தீவிரவாதத்தை வேரறுக்க உறுதுணையாக இருப்போம்: சவுதி இளவரசர் அறிவிப்பு

இந்தியாவில் தீவிரவாதத்தை வேரறுக்க சவுதி அரேபியா உறுதுணையாக இருக்கும் என அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார் புதுதில்லி: இந்தியாவில் தீவிரவாதத்தை வேரறுக்க சவுதி அரேபியா உறுதுணையாக இருக்கும் என அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். மேலும் பலர்
 

இந்தியாவில் தீவிரவாதத்தை வேரறுக்க சவுதி அரேபியா உறுதுணையாக இருக்கும் என அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்

புதுதில்லி: இந்தியாவில் தீவிரவாதத்தை வேரறுக்க சவுதி அரேபியா உறுதுணையாக இருக்கும் என அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சவுதி இளவரசராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக ஆசிய நாடுகளுக்கு அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் முதல் நாடாக அவர் பாகிஸ்தான் சென்றார். அப்போது, சவுதிக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 20 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையடுத்து அங்கிருந்து நேரடியாக தனி விமானம் மூலம் அவர் தில்லி வந்தடைந்தார். அவரை மரபுகளை மீறி இந்திய பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கே சென்று கட்டியணைத்து வரவேற்றார். இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு ஆகியோரைச் சந்தித்து சவுதி இளவரசர் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக, அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை, சவுதி இளவரசர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இருநாடுகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர். அப்போது, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் முடிவில், சுற்றுலா, ஒளிபரப்பு உள்ளிட்ட 5 துறைகள் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதன்பின்னர், இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா – சவுதி இடையேயான உறவுகள் வலுவாக வளர்ந்துள்ளன. இந்திய உள்கட்டமைப்புகளில்  சவுதி முதலீடுகளை நான் வரவேற்கிறேன். யங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்தும் ஆலோசனை நடத்தினோம். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைக்கு சவுதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எவருக்கும் தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்பது  நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம் என்றார்.

இதையடுத்து பேசிய சவுதி இளவரசர், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஒரு பொதுவான கவலையாக உள்ளது. பயங்கரவாதத்தை வேரறுக்க உளவுத்தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் எங்களது நட்புநாடான இந்தியாவுக்கு சவுதி அரேபியா உறுதுணையாக இருக்கும் என்றார்.