×

திருப்பதி கோவிலில் சாக்ஸ் அணிந்து நடந்த ராஜபக்சே! – பக்தர்கள் கொந்தளிப்பு

திருப்பதி கோவிலில் இலங்கை பிரதமர் ராஜபக்சே சாக்ஸ் காலுடன் சென்றது பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி கோவிலில் இலங்கை பிரதமர் ராஜபக்சே சாக்ஸ் காலுடன் சென்றது பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா வந்த இலங்கை பிரதமர் ராஜபக்சே, ஆந்திரமாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். வழக்கமாக வெறுங்காலுடன் தான் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், ராஜபக்சே சாக்ஸ் அணிந்து வந்தார். கோவிலின் வழக்கமான நடைமுறைகளை மீறிய ராஜபக்சேவுக்கு திருப்பதி
 

திருப்பதி கோவிலில் இலங்கை பிரதமர் ராஜபக்சே சாக்ஸ் காலுடன் சென்றது பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பதி கோவிலில் இலங்கை பிரதமர் ராஜபக்சே சாக்ஸ் காலுடன் சென்றது பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா வந்த இலங்கை பிரதமர் ராஜபக்சே, ஆந்திரமாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். வழக்கமாக வெறுங்காலுடன் தான் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், ராஜபக்சே சாக்ஸ் அணிந்து வந்தார். 

கோவிலின் வழக்கமான நடைமுறைகளை மீறிய ராஜபக்சேவுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. ராஜபக்சே காலில் சாக்ஸ் அணிந்து வந்ததை பாதுகாப்பு அதிகாரிகள், கோவில் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
இதற்கு ஏழுமலையான் பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஜபக்சேவின் செயல் இந்து மக்களை அவமதிக்கும் வகையிலும் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலும் இருப்பதாகவும், ராஜபக்சே சாக்ஸ் காலுடன் கோவிலுக்குள் வர அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.