×

திங்கள் தாலி கட்டினார் ,செவ்வாய்  தூக்கு மாட்டினார் -முதலிரவில் முடிந்ததும் ,வாழ்க்கையை முடித்த மாப்பிள்ளை 

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் தனக்கு விருப்பமான ஒரு பெண்ணை மணந்த ஒரு மாப்பிள்ளை, திருமணம் முடிந்து திரும்பி வரும் வழியிலிருந்த ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் அவர்களுக்கு திங்களன்று திருமணம் நடந்ததாகவும், செவ்வாய்க்கிழமை முதலிரவுக்கு பிறகு திரும்பி வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் தனக்கு விருப்பமான ஒரு பெண்ணை மணந்த ஒரு மாப்பிள்ளை, திருமணம் முடிந்து திரும்பி வரும் வழியிலிருந்த ஒரு மரத்தில் தூக்கு போட்டு
 

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் தனக்கு விருப்பமான ஒரு பெண்ணை மணந்த ஒரு மாப்பிள்ளை,  திருமணம் முடிந்து திரும்பி வரும் வழியிலிருந்த ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் அவர்களுக்கு திங்களன்று திருமணம் நடந்ததாகவும், செவ்வாய்க்கிழமை முதலிரவுக்கு பிறகு  திரும்பி வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் தனக்கு விருப்பமான ஒரு பெண்ணை மணந்த ஒரு மாப்பிள்ளை,  திருமணம் முடிந்து திரும்பி வரும் வழியிலிருந்த ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் அவர்களுக்கு திங்களன்று திருமணம் நடந்ததாகவும், செவ்வாய்க்கிழமை முதலிரவுக்கு பிறகு  திரும்பி வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிறகு அவரது சகோதரரும் மற்றவர்களும்   போலீசாருக்கு தகவல் அளித்து மணமகளை பரேலியில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டிற்கு திருப்பி அனுப்பினர்.

இதுபற்றி மாப்பிள்ளை துஷ்யந்தின் சகோதரர் சிவயந்த் கூறினார்: “கல்யாணம் முடிந்த மறுநாள் நாங்கள் மணமக்களை அழைத்துக்கொண்டு காரில் வந்தபோது நாங்கள் ஒரு சாலையோர உணவகத்தில் சாப்பிட காரை நிறுத்தினோம், அங்கு துஷ்யந்த் தேநீர் ஆர்டர் செய்தார், அதற்கு பிறகு  அவர் திடீரென காணாமல் போனார். நாங்கள் அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் . பின்னர் நாங்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு , வீட்டிற்கு புறப்பட்டோம். சிலமணி நேரத்துக்கு பிறகு தொலைபேசியில் துஷ்யந்தின் உடல் ஒரு மரத்திலிருந்து தொங்குவதாக  போலீசார் எங்களுக்கு தகவல் கொடுத்தனர் . “என்றார் 

இந்த சம்பவம் குறித்து துஷ்யந்த் மற்றும்  மணமகள் ஆஷாவின் குடும்பங்கள் அதிர்ச்சியடைந்தன
மீரட்டில் ஒரு பெட்ரோல் பம்பில் விற்பனையாளராக பணிபுரிந்த துஷ்யந்த், பரேலியில் தனக்கு விருப்பமான பெண்ணைத்தான்  திருமணம் செய்து கொண்டாராம் .இரு குடும்பங்களும் தம்பதியரின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு  அவர்களுக்கு  திருமணம் செய்து வைத்தனர்
இதற்கிடையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்  தூக்குப்போட்டு மரணம் அடைந்தார் என்பதை உறுதிப்படுத்தியதாக மொராதாபாத் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.