×

தமிழகத்தில் மூன்றாம் கட்டத்தை நோக்கி கொரோனா தொற்று – எச்சரிக்கும் வழக்கறிஞர்

தமிழத்தில் கொரோனா தொற்று மூன்றாம் கட்டத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருப்பதாக வழக்கறிஞர் ப.பாலதண்டாயுதம் தெரிவித்துள்ளார். சென்னை: தமிழத்தில் கொரோனா தொற்று மூன்றாம் கட்டத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருப்பதாக வழக்கறிஞர் ப.பாலதண்டாயுதம் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கோலாகலமாக ஈஷா மையத்தில் ஜாக்கி வாசுதேவ் தலைமையில் நடந்த மகாசிவராத்திரி விழாவில் வெளிநாட்டவர் உட்பட 10 லட்சம் கலந்து கொண்டனர். இதனால் அவ்வளவு பெரிய கூட்டம் வாயிலாக கொரோனா பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக வழக்கறிஞர் ப.பாலதண்டாயுதம்
 

தமிழத்தில் கொரோனா தொற்று மூன்றாம் கட்டத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருப்பதாக வழக்கறிஞர் ப.பாலதண்டாயுதம் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழத்தில் கொரோனா தொற்று மூன்றாம் கட்டத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருப்பதாக வழக்கறிஞர் ப.பாலதண்டாயுதம் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் கோலாகலமாக ஈஷா மையத்தில் ஜாக்கி வாசுதேவ் தலைமையில் நடந்த மகாசிவராத்திரி விழாவில் வெளிநாட்டவர் உட்பட 10 லட்சம் கலந்து கொண்டனர். இதனால் அவ்வளவு பெரிய கூட்டம் வாயிலாக கொரோனா பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக வழக்கறிஞர் ப.பாலதண்டாயுதம் எச்சரித்துள்ளார். இதனால் தமிழத்தில் கொரோனா தொற்று மூன்றாம் கட்டத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிப்ரவரி 15 முதல் வெளி நாட்டுக்குச் சென்று வந்தவர்களை கண்காணிக்கவும் வீடு வீடாகச் சென்று சோதனையிடவும் அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அரசு முக்கியமாக கவனிக்க வேண்டியது. கடந்த இரண்டு மாதங்களில் தமிழ் நாட்டில் அதிகமான வெளி நாட்டவர் கலந்து கொண்ட மிகப் பெரும் நிகழ்வு பிப்ரவரி 21 அன்று ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஈசா மையம் நடத்திய மகாசிவராத்திரி கொண்டாட்டம் தான்.

நாடு நெருக்கடியான நிலையை சந்திக்கவுள்ள நிலையில், கொரோனா நோய் தொற்றுள்ள சீனா உட்பட உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் எண்ணற்றோர் கலந்து கொண்டார்கள், இதனை ஜக்கி நேர்மையுடன் தெரிவிக்கவில்லை. உலக நாடுகள் கதவடைப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்நாட்டின் அரச தலைவர்கள் கொரோனா பற்றிய எந்தப் புரிதலுமின்றி ஆபத்தை உணராமல் , வேறு நாட்டவர் வருகையை கண்காணித்து கட்டுப் படுத்தாமல் தாராளமாக அனுமதித்ததோடு இவர்களும் சேர்ந்து Social gathering-க்கு உடந்தையாக இருந்தனர் என்பதை ஆதாரத்துடன் விவரிக்கவே இச் சிறு கட்டுரை.

இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் உட்பட இதில் கலந்து கொண்டுள்ள ஏறத்தால 10 லட்சம் பேரை இத்தொற்று பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்நிகழ்வில் சீனா, ஜெர்மன், ருஷ்யா, UK,  லாஸ் ஏஞ்சல்ஸ், ஜப்பான், கொரியா, லெபனான் மற்றும் பல நாடுகளிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என்பதை ’Business Standard’ பத்திரிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

பொதுவாக சீனா நாட்டில் இருந்து எப்போதும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் கொரோனாவால் இந்த ஆண்டு சீனர்கள் வருகை கனிசமாக குறைந்துள்ளது” என்று  ’India TV’ எனும் இணைய இதழ் கூறுகிறது. மேலும் ”இங்கு மெடிடேசன் செய்வது மனதிற்கு நிறைவாக இருக்கிறது, கொரோனாவால் பிற சீனர்கள் வரமுடியாதது வருத்தம் தான், சத்குரு அவர்கள் கொரோனா குறித்து பேச வேண்டும் என என் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டனர்” என்று இந்நிகழ்வில் கலந்து கொண்ட Xiuhang எனும் சீனர்  ‘India TV’-க்கு பேட்டியளித்துள்ளார், அதனை India TV உறுதி செய்கிறது.

பல்வேறு உலக நாடுகளிலிருந்து மகாசிவராத்திக்கு லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்ள விருப்பதாக ’version weekly’ இணைய இதழ் கூறுகிறது. ’ap7am.com’ எனும் மற்றொரு இணைய இதழ் ”இந்நிகழ்வில் கலந்து கொள்ள உலக நாடுகளிலிருந்து மக்கள் வந்துள்ளார்கள்” என தன் இணைய செய்தியில் உறுதிப்படுத்தியுள்ளது.

’SIMLIC!TY’ என்கிற மற்றொரு இனைய  செய்தி இதழ், இது குறித்து கீழ்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது.சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஈஷா மையம் நடத்தும் மகாசிவராத்திரி இரவுக் கொண்டாட்டத்தில்பல்வேறு உலக நாடுகளிலிருந்து வந்துள்ள இசைக் கலைஞர்கள் இசைக்கும் இசைக் கச்சேரியைக் காண உலக நாடுகள் பலவற்றிருந்திலிருந்து மக்கள் கலந்து கொள்கிறார்கள்”.

லெபனான் நாட்டு ட்ரம்மர்ஸ் மற்றும் ‘Kabir cafe’ இசை நிகழ்ச்சி குழுவினர் பலர் பங்கேற்று நடத்திய இசைக் கச்சேரியை “NDTV, NEWS-18, TVS5 NEWS” மற்றும் பல செய்தி சேனல்கள் ஒளிபரப்புச் செய்துள்ளன, அதனை நாமும் தொலைக் காட்சியில் பார்த்திருப்போம். இச்செய்திகள் அனைத்துமே சீனா உட்பட ஜெர்மன், ருஷ்யா, UK,  லாஸ் ஏஞ்சல்ஸ், ஜப்பான், கொரியா, லெபனான் மற்றும் பல நாடுகளிலிருந்தும் பல்வேறு  நாட்டைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டதை உறுதி செய்கின்றன.

மேலும் மகாசிவராத்திரிக்கு மேதகு இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஜக்கி வாசுதேவ் எழுதிய  ‘Death-An inside story’ எனும் நூலையும் வெளியிட்டுள்ளார். அவரோடு ஹிமாச்சலப்பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தரேயா, நீர் மின்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், கர்நாடக அமைச்சர் டாக்டர்.கே.சுதாகர், தமிழ் நாட்டு அமச்சர்கள் S.P.வேலுச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், உடுமலை ராஜேந்திரன் மற்றும் எண்ணற்ற IAS, IPS, M.L.A, M.P, காவலர்கள் மற்றும் பல VIP-கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஏறத்தால 10 லட்சம் மக்கள் கலந்து கொண்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. கொரோனா மேற்கண்ட நாடுகளைத் தாக்கிய பின்பு, 2020 பிப்ரவரி 21 அன்று இந்நிகழ்வு  நடைபெற்றிருக்கிறது. மார்ச் 12 வரை கிட்டத்தட்ட 80,000 பேர் வெளி நாடுகளிலிருந்து வந்தவர்கள் என  சில குறிப்புகள் தெரிவிக்குன்றன. தற்போது தமிழ் நாடு அரசு பிப்ரவரி 15-க்குப் பின் வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களை கண்காணிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், மூன்றாம் கட்ட சமூகப் பரவலைக் கண்டறிய மகாசிவராத்திரியில் கலந்து கொண்டுள்ளவர்களைக் கண்டறிந்து சோதனை செய்யவும், அவசியம் ஏற்பட்டால் தனிமைப்படுத்துவதும் சமூகப் பரவல் எனும் பேரபாயத்தைத் தடுக்க முடியும்.

தமிழ் நாட்டையும் பிற பகுதியையும் பேரழிவிலிருந்து காக்க முடியும். ஜக்கி வாசுதேவ் இவ்வளவு நாளாக இதனை தானாக முன் வந்து அரசிடம் தெரிவிக்காதது சட்டப் புறம்பானது மட்டுமல்ல. மக்களின் மீது அவருக்குள்ள அக்கறையையும் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஊரடங்கின் முதல் நாளில் அதனை மீறி UP முதலவர் ஆதித்யநாத் ராமர் கோயில் கட்டுமான பூசையை நடத்தியுள்ளார். MP- யில் BJP ஆட்சிக் கவிழ்ப்பையும் பதவியேற்பையும் நடத்திக் காட்டியுள்ளது. தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல் தற்போது பால் வாங்கச் சென்ற சாமானியர் கல்கத்தாவில் காவலர்களால் கொலை செய்யப்படுவதும், பிற பகுதிகளில் லத்தியால் பதம் பார்க்கப்படுவதும் நடந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.