×

டொனால்ட் டிரம்ப்பிற்கு கான் சமோசா, குக்கீஸ் என வகை வகையான உணவுகள்…மெனுவை சொல்லும் செஃப் சுரேஷ் கண்ணா

சபர்மதி ஆசிரமம் வரை லட்சக்கணக்கானோர் பங்கேற்று வரவேற்கவுள்ளனர். 2.15 மணிக்கு சபர்மதி ஆசிரமம் செல்கிறார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று திறந்து வைக்கிறார். இதனால் மத்திய அரசு டிரம்ப் வருகைக்காகப் பல ஏற்பாடுகளை முனைப்புடன் செய்துள்ளது. நண்பகல் 11.40 மணிக்கு குஜராத்திற்கு வரும் மனைவி மெலனியாவுடன் வருகை புரியும் டிரம்ப்பை விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமம் வரை லட்சக்கணக்கானோர் பங்கேற்று வரவேற்கவுள்ளனர். 2.15
 

சபர்மதி ஆசிரமம் வரை  லட்சக்கணக்கானோர் பங்கேற்று  வரவேற்கவுள்ளனர். 2.15 மணிக்கு சபர்மதி ஆசிரமம் செல்கிறார்.

 குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று   திறந்து வைக்கிறார். இதனால் மத்திய அரசு டிரம்ப் வருகைக்காகப் பல ஏற்பாடுகளை முனைப்புடன் செய்துள்ளது.  நண்பகல் 11.40 மணிக்கு குஜராத்திற்கு வரும்  மனைவி மெலனியாவுடன் வருகை புரியும் டிரம்ப்பை விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமம் வரை  லட்சக்கணக்கானோர் பங்கேற்று  வரவேற்கவுள்ளனர். 2.15 மணிக்கு சபர்மதி ஆசிரமம் செல்கிறார்.

 

பின்னர் பிற்பகல் 1.05 மணியளவில், ஒரு லட்சம் பேர் வரை அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். இதையடுத்து மாலை 3.30 மணிக்கு குஜராத்திலிருந்து புறப்பட்டு 4.45 மணிக்கு ஆக்ரா சென்று தாஜ்மகாலை பார்வையிடுகிறார். பின்னர்  7.30 மணிக்கு டெல்லிக்கு செல்கிறார். அங்குள்ள சொகுசு விடுதியில் தங்கும் அவருக்கு நாளை காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில்  அரசு முறை வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. 

இந்நிலையில், குஜராத் செல்லும் டிரம்ப் – மெலனியா தம்பதிக்கு சைவ உணவுகளை மட்டும் பரிமாறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உணவுகளை FORTUNE LANDMARK HOTELல் பணியாற்றும் சமையல் கலைஞர்  சுரேஷ் கண்ணா   தயாரிக்கிறார்.

இதில் குஜராத்தின் பாரம்பரிய உணவான  காமன் வழங்கப்படவுள்ளது. இது கடலை மாவு, தானியங்கள் கொண்டு தயாரிக்கப்படுவது.

இது தவிர, தேநீர், காஃபி, தானிய குக்கீஸ், ஆப்பிள் பை, இஞ்சி டீ, ப்ரோகோலி, கான் சமோசா, ஐஸ் தேநீர் ஆகிய உணவுகளும் வழங்கப்படவுள்ளது. 

 

அசைவ விரும்பியான டிரம்ப் பீட்சா, சாக்லெட் மில்க் ஷேக், கடல் உணவுகள், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை விரும்பி உண்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.