×

டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பும் அறிவித்தது….. ஊரடங்கு தளர்வு கிடையாது…..

டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு தளர்வு கிடையாது என அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வரும் மே 3ம் தேதி வரை மொத்தம் 40 நாட்கள் லாக்டவுனை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று முதல் சில குறிப்பிட்ட துறைகள் இயங்கும் வகையில் லாக்டவுன் விதிமுறைகள் சிறிது தளர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம் டெல்லி இப்போதைக்கு ஊரடங்கு தளர்வு கிடையாது என்றும், ஒரு வாரம் மதிப்பீடு செய்தபிறகே தளர்வு குறித்து முடிவு செய்யப்படும்
 

டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு தளர்வு கிடையாது என அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வரும் மே 3ம் தேதி வரை மொத்தம் 40 நாட்கள் லாக்டவுனை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று முதல் சில குறிப்பிட்ட துறைகள் இயங்கும் வகையில் லாக்டவுன் விதிமுறைகள் சிறிது தளர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம் டெல்லி இப்போதைக்கு ஊரடங்கு தளர்வு கிடையாது என்றும், ஒரு வாரம் மதிப்பீடு செய்தபிறகே தளர்வு குறித்து முடிவு செய்யப்படும் என அறிவித்தது.

இந்த நிலையில், மே 3ம் தேதி வரை ஊரடங்கு தளர்வு கிடையாது என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் டிவிட்டரில், கள நிலவரத்தை ஆய்வு செய்தபிறகு, ஊரடங்கை மே 3ம் தேதி வரை தளர்த்த வேண்டாம் என பஞ்சாப் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கோதுமை கொள்முதல் செய்வதற்கு மட்டுமே இருக்கும் தளர்வு மட்டுமே. அதற்காக ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள விதிகளின் மூலம் நாம் செல்வோம்

ஊரடங்கு உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்துவதை உறுதி செய்ய டி.சி.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என பதிவு செய்து இருந்தார். பஞ்சாப்பில் நேற்று மாலை நிலவரப்படி 219 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று நோய்க்கு 16 பேர் பலியாகி உள்ளனர்