×

டெல்லி வன்முறையை ஒளிபரப்பிய செய்தி சேனல்களுக்கு தடை விதித்த மத்திய அரசு!

இரண்டு கேரள தொலைக்காட்சி சேனல்கள், மீடியாஒன் மற்றும் ஏசியானெட் ஆகியவை 48 மணி நேரம் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது இரண்டு கேரள தொலைக்காட்சி சேனல்கள், மீடியாஒன் மற்றும் ஏசியானெட் ஆகியவை 48 மணி நேரம் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த ஷாகீன் பாக் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜாஃபராபாத், மாஜ்பூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வந்தது. இதில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் கடந்தவாரம் மோதல் ஏற்பட்டது.
 

இரண்டு கேரள தொலைக்காட்சி சேனல்கள், மீடியாஒன் மற்றும் ஏசியானெட் ஆகியவை 48 மணி நேரம் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது

இரண்டு கேரள தொலைக்காட்சி சேனல்கள், மீடியாஒன் மற்றும் ஏசியானெட் ஆகியவை 48 மணி நேரம் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த ஷாகீன் பாக் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜாஃபராபாத், மாஜ்பூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வந்தது. இதில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் கடந்தவாரம் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லியில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கில் ஏற்பட்ட வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 50 ஐ நெருங்கியுள்ளது.

கேரளாவில் “ஏசியாநெட் நியூஸ்” மற்றும் “மீடியா ஒன்” ஆகிய இரண்டு பிரபல செய்தி சேனல்கள், வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைகள் குறித்து ஒருதலைபட்சமாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு பக்கபலமாகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் செய்தி ஒளிபரப்பியதால் வெள்ளிக்கிழமை 7.30 மணி முதல் மார்ச் 8ம் தேதி இரவு 07.30 மணி வரையிலான 48 மணி நேரம் சேனல் ஒளபரப்பிற்கு தடை விதித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இரண்டு சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.