×

டெல்லி மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ்! வைரல் வீடியோ – அலறும் போலீஸ்

டெல்லியில் மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், இது எப்படி என்று தெரியவில்லை என்று டெல்லி போலீஸ் பதறியுள்ளது. டெல்லியில் மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், இது எப்படி என்று தெரியவில்லை என்று டெல்லி போலீஸ் பதறியுள்ளது. டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்தது.
 

டெல்லியில் மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், இது எப்படி என்று தெரியவில்லை என்று டெல்லி போலீஸ் பதறியுள்ளது.

டெல்லியில் மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், இது எப்படி என்று தெரியவில்லை என்று டெல்லி போலீஸ் பதறியுள்ளது.

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதில், ஜாமியா பல்கலைக் கழக மாணவர்களும் கலந்துகொண்டதாக கூறப்பட்டது. போராட்டத்தில் கலவரம் ஏற்படவே கூட்டத்தினர் பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் அடித்து உதைத்தனர். மேலும், இந்த போராட்டத்தில் துப்பாக்கி காயத்துடன் மாணவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. கண்ணீர் குண்டுகளை வெடிக்கச் செய்யும்போது இதுபோன்று காயங்கள் ஏற்படலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

தற்போது, போலீசார் துப்பாக்கியால் சுடும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில், பிஸ்டல் வகை துப்பாக்கியைப் பயன்படுத்தி மாணவர்களை நோக்கி சுடுவது போன்று உள்ளது. வீடியோவில் உள்ள மூவர் கையிலும் துப்பாக்கிகள் உள்ளன. துப்பாக்கியால் சுடும் சத்தமும் கேட்கிறது.

மற்றொரு வீடியோவில் துப்பாக்கி குண்டால் காயம் அடைந்த அஜாஸ் என்ற மாணவர் ஓடி வருகிறார். திடீரென்று துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கிறது. அஜாஸ் சரிந்து விழுகிறார். உடனிருக்கும் மாணவர்கள் அவரைத் தாங்கி பிடிக்கின்றனர். நெஞ்சை உலுக்கும் இந்த காட்சிகள் தற்போது சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது. போராட்டத்தில் துப்பாக்கியால் சுட யாருக்கும் உத்தரவு அளிக்கப்படவில்லை. ஒரு வேளை தற்காப்புக்காக சுட்டிருக்கலாம். இது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். 

“டெல்லி போலீஸ் தரப்பில் ட்ரோன் உதவியுடன் வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்து வருகிறோம். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ரப்பர் குண்டு எதையும் காவலர்கள் எடுத்துச் செல்லவில்லை. இதனால், விசாரணைக்குப் பிறகே உண்மை தெரியவரும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீஸ் இணை ஆணையர் தேவேஷ் ஶ்ரீவட்சா தெரிவித்துள்ளார்.