×

டெல்லி கலவரம் திட்டமிட்ட இனப்படுகொலை…வெட்கமில்லாமல் பேசும் அமித்ஷா! மம்தா பதிலடி

மேற்குவங்கத்தில் நடந்த பா.ஜ.க நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்கத்துக்கு பல ஆயிரம் கோடி நிதி உதவிகளை மத்திய அரசு அளித்துள்ளது என்றும் ஆனால் அதை பயன்படுத்தாமல் முறைகேடு நடப்பதாகவும், மேற்கு வங்கத்தில் பா.ஜ.க அமைந்தால் மாநிலமே தங்கமாக ஜொலிக்கும் என்று எல்லாம் பேசியிருந்தார். மத்திய அரசு நிதி உதவிகள் மேற்கு வங்கத்துக்கு வராமல் மம்தா தடுக்கிறார் என்று அமித்ஷா கூறியிருந்த நிலையில்,டெல்லி கலவரம் திட்டமிட்ட படுகொலை… இதற்காக பா.ஜ.க இதுவரை மன்னிப்பு
 

மேற்குவங்கத்தில் நடந்த பா.ஜ.க நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்கத்துக்கு பல ஆயிரம் கோடி நிதி உதவிகளை மத்திய அரசு அளித்துள்ளது என்றும் ஆனால் அதை பயன்படுத்தாமல் முறைகேடு நடப்பதாகவும், மேற்கு வங்கத்தில் பா.ஜ.க அமைந்தால் மாநிலமே தங்கமாக ஜொலிக்கும் என்று எல்லாம் பேசியிருந்தார்.

மத்திய அரசு நிதி உதவிகள் மேற்கு வங்கத்துக்கு வராமல் மம்தா தடுக்கிறார் என்று அமித்ஷா கூறியிருந்த நிலையில்,டெல்லி கலவரம் திட்டமிட்ட படுகொலை… இதற்காக பா.ஜ.க இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறி பதிலடி அளித்துள்ளார் மம்தா பானர்ஜி.
மேற்குவங்கத்தில் நடந்த பா.ஜ.க நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்கத்துக்கு பல ஆயிரம் கோடி நிதி உதவிகளை மத்திய அரசு அளித்துள்ளது என்றும் ஆனால் அதை பயன்படுத்தாமல் முறைகேடு நடப்பதாகவும், மேற்கு வங்கத்தில் பா.ஜ.க அமைந்தால் மாநிலமே தங்கமாக ஜொலிக்கும் என்று எல்லாம் பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.அவர் கூறுகையில், “டெல்லி கலவரம் ஒரு திட்டமிடப்பட்ட இனப் படுகொலை. சிஏஏ-வுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நடந்த கலவரத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கலவரத்துக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.மத்திய அரசின் உளவுத்துறை தோல்வியே கலவரத்துக்கு காரணம். இந்த இனப்படுகொலைக்காக பா.ஜ.க இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தை கைப்பற்றுவோம் என்று வெட்கமே இல்லாமல் பேசி வருகின்றனர். டெல்லியில் வன்முறையை எழுப்பிய பா.ஜ.க தலைவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன்? அமித்ஷா பங்கேற்ற பேரணியில் துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்று கோஷம் எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்திருக்கிறோம். இப்படியான கோஷம் எழுப்பியவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டே தீர வேண்டும்” என்றார்.