×

டிரம்ப் மகள் இவாங்கா கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கெஜ்ரிவால் பங்கேற்கத் தடையில்லை : அமெரிக்கத் தூதரகம் விளக்கம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இன்று இந்தியாவிற்கு வரவிருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இன்று இந்தியாவிற்கு வரவிருக்கிறார். அவருடன் அவரது மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா மற்றும் மருமகன் ஜேர்ட் குஷ்னர் ஆகியோரும் வருகை தர உள்ளனர். இவர்களது வருகையை இந்தியாவே எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது. சரியாக 11:40 மணிக்கு அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திற்கு வரவிருக்கும் டிரம்ப் மற்றும்
 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இன்று இந்தியாவிற்கு வரவிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இன்று இந்தியாவிற்கு வரவிருக்கிறார். அவருடன் அவரது மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா மற்றும் மருமகன் ஜேர்ட் குஷ்னர் ஆகியோரும் வருகை தர உள்ளனர். இவர்களது வருகையை இந்தியாவே எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது.

சரியாக 11:40 மணிக்கு அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திற்கு வரவிருக்கும் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கிறார். இந்த இரண்டு நாட்களுக்கு அவர்கள் எங்கெங்கு செல்கிறார்கள் என்ற அனைத்து சுற்றுப்பயண விவரங்களும் வெளியாகியுள்ளது. 

நாளை டெல்லியில் உள்ள மோதிபாக் பள்ளியில் டிரம்பின் மகள் இவாங்கா மாணவ, மாணவிகளுடன் உரையாடவிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான சிறப்பு விருந்தினர்கள் பட்டியலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரும், துணை முதல்வர் மணீஷ் சிசோடியோ பெயரும் இடம் பெறவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இது குறித்து அமெரிக்கத் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இவாங்கா கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலும், மணீஷ் சிசோடியோவும் கலந்து கொள்ள எந்த தடையும் இல்லை என்றும் இது மாணவர்களின் கல்வியை மையப்படுத்தி நடத்தப்படுகிறது, அரசியல் நிகழ்ச்சி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.