×

டிரம்ப் இன்னைக்கு வர்றாரு…. அதனால சீக்கிரம் விமான நிலையத்துக்கு வந்துவிடுங்க…. பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் வேண்டுகோள்

அகமதாபாத்துக்கு திங்கட்கிழமையன்று (இன்று) அமெரிக்க அதிபர் டிரம்ப் வருவதால், சாலைகளில் வாகன நெரிசல் இருக்கும் அதனால் விமான நிலையத்துக்கு குறித்த நேரத்துக்கு முன்பாகவே வரும்படி, விஸ்தாரா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தங்களது பயணிகளை அறிவுறுத்தியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு முதல் முறையாக வருகிறார். அவருடன் அவரது மனைவி மெலினா டிரம்ப், மகள் இவாங்கா மற்றும் மருமகன் ஜெர்ட் குஷ்னர் உள்ளிட்டோரும் வருகின்றனர். நாளை மதியம் அகமதாதபாத் விமான நிலையத்தில் வந்திறங்கும்
 

அகமதாபாத்துக்கு திங்கட்கிழமையன்று (இன்று) அமெரிக்க அதிபர் டிரம்ப் வருவதால், சாலைகளில் வாகன நெரிசல் இருக்கும் அதனால் விமான நிலையத்துக்கு குறித்த நேரத்துக்கு முன்பாகவே வரும்படி,  விஸ்தாரா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தங்களது பயணிகளை அறிவுறுத்தியுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு முதல் முறையாக வருகிறார். அவருடன் அவரது மனைவி மெலினா டிரம்ப், மகள் இவாங்கா மற்றும் மருமகன் ஜெர்ட் குஷ்னர் உள்ளிட்டோரும் வருகின்றனர். நாளை மதியம் அகமதாதபாத் விமான நிலையத்தில் வந்திறங்கும் அமெரிக்க அதிபர் டிரம்பை நமது பிரதமர் நரேந்திர மோடி வரவேற்க உள்ளார்.

அமெரிக்க அதிபரை வரவேற்க அகமதாபாத் நகரமே முழுவீச்சில் தயாராகி வருகிறது. டிரம்பின் வருகையால் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், விமான நிலையத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே வரும்படி விஸ்தாரா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் தங்களது பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.

இந்நிலையில் டிரம்பின் வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்பு நடவடிக்கை குறிப்பிட்டு, விமானங்கள் கிளம்புவதற்கு குறைந்தபட்சம் 3 மணி நேரத்துக்கு முன்பாகவே விமான நிலையத்துக்கு வரும்படி விமான பயணிகளுக்கு அகமதாபாத் விமான நிலைய இயக்குனர் ஆலோசனை வெளியிட்டுள்ளார்.