×

ஜி.எஸ்.டி-யில் ரூ.100 கோடி மோசடி! – அதிர்ச்சியில் அதிகாரிகள்

உ.பி-யில் ஒரு நிறுவனம் போலியாக பல பெயர்களில் நிறுவனங்களைத் தொடங்கி ரூ.100 கோடி அளவுக்கு ஜி.எஸ்.டி-யில் முறைகேடு செய்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. உ.பி-யில் ஒரு நிறுவனம் போலியாக பல பெயர்களில் நிறுவனங்களைத் தொடங்கி ரூ.100 கோடி அளவுக்கு ஜி.எஸ்.டி-யில் முறைகேடு செய்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவை தலைமையிடமாகக் கொண்டு ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் 10 மாநிலங்களில் கிளைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில்
 

உ.பி-யில் ஒரு நிறுவனம் போலியாக பல பெயர்களில் நிறுவனங்களைத் தொடங்கி ரூ.100 கோடி அளவுக்கு ஜி.எஸ்.டி-யில் முறைகேடு செய்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

உ.பி-யில் ஒரு நிறுவனம் போலியாக பல பெயர்களில் நிறுவனங்களைத் தொடங்கி ரூ.100 கோடி அளவுக்கு ஜி.எஸ்.டி-யில் முறைகேடு செய்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவை தலைமையிடமாகக் கொண்டு ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் 10 மாநிலங்களில் கிளைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் நேற்று ஜி.எஸ்.டி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பல போலி பெயரில் புது புது நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, அதன் மூலம் அரசுக்கு ரூ.100 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்த நிறுவனத்தை நடத்திவந்த ஆக்ராவைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் கிருபாளினியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இவரது நிறுவனத்துக்கு தமிழகம், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கிளைகள் உள்ளதாக கூறப்படுகிறது. 120க்கும் மேற்பட்ட பெயர்களில் போலியாக நிறுவனம் தொடங்கி அதன் கீழ் இவர்கள் வர்த்தகம் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த நிறுவனத்தின் வர்த்தகம், கணக்கு தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.