×

ஜனவரி 5ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்கப்படும்- கேரள அரசு

உருமாறிய கொரோனா பரவலால் பொதுமுடக்கத்தை கூடுதல் தளர்வுகளுடன் ஜனவரி 31வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகளில், பணியாளர்கள் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு இல்லை என்ற புதிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் அனுமதிக்கப்படும் இருக்கைகள் 50 சதவீதம் என்றே நீடிக்கிறது. இதனால் மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு படக்குழுவினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இருப்பினும் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கவேண்டுமென திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனால்
 

உருமாறிய கொரோனா பரவலால் பொதுமுடக்கத்தை கூடுதல் தளர்வுகளுடன் ஜனவரி 31வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகளில், பணியாளர்கள் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு இல்லை என்ற புதிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் அனுமதிக்கப்படும் இருக்கைகள் 50 சதவீதம் என்றே நீடிக்கிறது. இதனால் மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு படக்குழுவினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இருப்பினும் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கவேண்டுமென திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனால் கொரோனா பரவலால் கேரள மாநிலத்தில், திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. ந்எட்டு மாதங்களாக மூடிக்கிடந்த தியேட்டர்கள் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் திறக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் ஜனவரி 5ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் தியேட்டரை திறக்க வேண்டும் எனவும், முக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.