×

சூடு பிடிக்கும் ப.சிதம்பரம் வழக்கு! இந்திராணி முகர்ஜியிடம் மீண்டும் விசாரணை நடத்தும் சி.பி.ஐ.

ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில், அப்ரூவர் இந்திராணி முகர்ஜியிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, கடந்த 2007ல் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி நடத்தி வந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய நேரடி முதலீட்டை பெற்றது. இதற்காக மத்திய நிதியமைச்சகத்தன்கீழ் செயல்படும் அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை இந்திராணி முகர்ஜிக்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி
 

ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில், அப்ரூவர் இந்திராணி முகர்ஜியிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, கடந்த 2007ல் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி நடத்தி வந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய நேரடி முதலீட்டை பெற்றது.  இதற்காக மத்திய நிதியமைச்சகத்தன்கீழ் செயல்படும் அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை இந்திராணி முகர்ஜிக்கு  ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வாங்கி கொடுத்துள்ளார். இதற்காக  கார்த்திக் சிதம்பரம் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டு எழுந்தது. இதனையடுத்து 2017ல் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இதற்கிடையே, தனது மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில், இந்திராணியும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜியும் சிறையில் அடைக்கப்பட்டனர்.  ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறி விட்டார். அன்னிய நேரடி முதலீட்டை பெறுவது தொடர்பாக அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த  ப.சிதம்பரத்தை சந்தித்ததாகவும், அவர் தனது பையன் கார்த்திக் சிதம்பரத்தை சந்திக்கும்படி கூறியதாகவும் தெரிவித்தார். மேலும், அன்னிய நேரடி முதலீடு ஒப்புதல் பெறுவதற்காக கார்த்திக் சிதம்பரத்துக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். அதன் வாக்குமூலத்தின் அடிப்படையில் ப.சிதம்பரத்தை அண்மையில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது விசாரணை நடத்தினர். தற்போது ப.சிதம்பரம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில் அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜியிடம் இந்த வழக்கு தொடர்பாக சில நிதிபரிமாற்றங்கள் குறித்து  விளக்கம் கேட்க வேண்டும். அதனால் அவரிடம் விசாரணை நடத்த அனுமதி வேண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அனுமதி வேண்டி மனுதாக்கல் செய்தனர். அதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இந்திராணி முகர்ஜியிடம் விசாரணை நடத்த அனுமதி அளித்தது. மேலும், சிறைக்குள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிக்குள் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.