×

சுஜித்துக்கு இரங்கல்: கனத்த இதயத்துடன் இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டாக்குகள்!

கல்லறைத் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள உடல் இறுதி சடங்கிற்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. குழந்தை சுஜித் இறந்துவிட்ட நிலையில் #RIPSujith, #SujithWilson, #SorrySujith ஆகிய ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளன. திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான். 80 மணி நேரத்திற்கும் அதிகமான இந்த மீட்பு போராட்டம் தோல்வியில் முடிந்தது. உடல் சற்று சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சுஜித்தின் உடல்
 

கல்லறைத் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள உடல் இறுதி சடங்கிற்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

குழந்தை சுஜித் இறந்துவிட்ட நிலையில் #RIPSujith, #SujithWilson, #SorrySujith ஆகிய ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளன.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை  5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான்.  80 மணி நேரத்திற்கும் அதிகமான இந்த மீட்பு போராட்டம் தோல்வியில் முடிந்தது.

உடல் சற்று சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு  பிரேத பரிசோதனை முடிந்தது. தற்போது  கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள உடல் இறுதி சடங்கிற்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

இந்நிலையில் சுஜித்தின் மறைவுக்கு ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர்  வடிகிறது. குறிப்பாக  சுஜித்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக டிவிட்டர் #RIPSujith, #SujithWilson, #SorrySujith, #ripsurjeeth  ஆகிய  ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளன. இதிலிருந்து தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவும் சுஜித் மறைவுக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருவது புலப்படுகிறது.