×

சி.ஏ.ஏ ஆதரவு கலவரத்தை மட்டும் காட்டியதால் கோபத்தில் 48 மணி நேர தடை! எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் பின்வாங்கிய மத்திய அரசு

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பாக 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வந்தது. சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டத்தில் குதித்த முதல் நாளே கலவரம் வெடித்தது. இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டன. இது தொடர்பாக அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பற்றிய செய்தியை மட்டுமே ஒளிபரப்பியதாக கூறி இரண்டு மலையாள சேனல்களுக்கு விதிக்கப்பட்ட 48 மணி நேர தடை நீக்கப்பட்டுள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பாக
 

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பாக 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வந்தது. சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டத்தில் குதித்த முதல் நாளே கலவரம் வெடித்தது. இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டன. இது தொடர்பாக அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பற்றிய செய்தியை மட்டுமே ஒளிபரப்பியதாக கூறி இரண்டு மலையாள சேனல்களுக்கு விதிக்கப்பட்ட 48 மணி நேர தடை நீக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பாக 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வந்தது. சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டத்தில் குதித்த முதல் நாளே கலவரம் வெடித்தது. இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டன. இது தொடர்பாக அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

மலையாள சேனல்கள் ஏஷியாநெட் மற்றும் மீடியா ஒன் மட்டும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பற்றி மட்டுமே செய்தி வெளியிட்டதாகவும் இரு தரப்பினர் இடையே இதன் மூலம் பதற்றம் ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் கூறி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த இரண்டு சேனல்களுக்கும் 48 மணி நேர ஒளிபரப்பு தடைவிதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று மாலை 7.30 மணி அளவில் இந்த இரு சேனல்களின் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டன.

ஏஷியாநெட் டெல்லி கலவரத்தை வகுப்புவாத வன்முறை என்று குறிப்பிட்டதாகவும் மத்திய அரசுதான் இந்த வன்முறை நடக்க ஒப்புதல் அளித்ததாகவும் செய்தி வெளியிட்டதாக மத்திய அரசு குற்றம்சாட்டியள்ளது. மேலும், சாலையில் நடந்து செல்பவர்கள் எல்லாம் ஜெய் ஶ்ரீராம் என்று கோஷம் எழுப்ப வற்புறுத்தப்படுகிறார்கள், இஸ்லாமியர்கள் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள், மத்திய அரசு இந்த வன்முறையை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று செய்தி வெளியிட்டதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

 

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி இது தொடர்பாக கூறுகையில், “மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் நடவடிக்கை ஊடக சுதந்திரம் மீதான தாக்குதல் என்று குற்றம்சாட்டினார். ப.சிதம்பரம் “நீதிக்கு நேர்ந்த பரிதாம்” என்று விமர்சித்திருந்தார்.
பல்வேறு ஊடக அமைப்புகள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த இரண்டு சேனல்களுக்கு விதிக்கப்பட்ட 48 மணி நேர தடை நீக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு சேனல்களும் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன. இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.