×

சபரிமலையில் போலீசார் குவிப்பு: நாளை மீண்டும் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்க இருப்பதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்க இருப்பதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பிற்குப் பின் கடந்த மாதம் கோயில் திறக்கப்பட்ட போது, பெண்களும் வழிபாடு நடத்த கோயிலுக்குள் முயன்றனர். ஆனால், பக்தர்கள் அவர்களை அனுமதிக்க முடியாது என
 

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்க இருப்பதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்க இருப்பதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பிற்குப் பின் கடந்த மாதம் கோயில் திறக்கப்பட்ட போது, பெண்களும் வழிபாடு நடத்த கோயிலுக்குள் முயன்றனர். ஆனால், பக்தர்கள் அவர்களை அனுமதிக்க முடியாது என கூறி போராட்டத்தில்.

அந்த போராட்டம் பெரிய அளவிற்கு பதற்றத்தை ஏற்படுத்தியதால், கோயில் நடை மூடப்பட்டது. அதன்பின், மாதாந்திர பூஜைக்காக கோயில் நடை நாளை மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. 

இந்நிலையில், மீண்டும் போராட்டம் நடைபெறாமல் இருப்பதைத் தடுப்பதற்காக 1,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பத்தனம்திட்டா காவல் கண்காணிப்பாளர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை காவல்துறை செயல்படுத்தும் அதே வேளையில், பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் நாராயணன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இம்முறை ஊடகங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாளை தான் ஊடகங்கள் அனுமதிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.