×

சபரிமலையில் பெண்கள் தரிசனம்: பரிகார பூஜைக்கு பிறகு மீண்டும் நடை திறக்கப்பட்டது!

பெண்கள் நுழைந்ததால் சபரிமலை கோவிலின் நடை மூடப்பட்டதையடுத்து பரிகார பூஜைக்கு பிறகு மீண்டும் நடை திறக்கப்பட்டது. கேரளா: பெண்கள் நுழைந்ததால் சபரிமலை கோவிலின் நடை மூடப்பட்டதையடுத்து பரிகார பூஜைக்கு பிறகு மீண்டும் நடை திறக்கப்பட்டது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 50 வயதுக்கும் குறைவான பிந்து மற்றும் கனகதுர்கா என்ற இரு பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 3.45 மணிக்கு பதினெட்டு படி ஏறாமல் கோவில் பின்புறம் வழியாகச் சன்னிதானத்தை அடைந்த இவர்கள்
 

பெண்கள் நுழைந்ததால் சபரிமலை கோவிலின்  நடை மூடப்பட்டதையடுத்து பரிகார பூஜைக்கு பிறகு  மீண்டும் நடை திறக்கப்பட்டது.

கேரளா: பெண்கள் நுழைந்ததால் சபரிமலை கோவிலின்  நடை மூடப்பட்டதையடுத்து பரிகார பூஜைக்கு பிறகு  மீண்டும் நடை திறக்கப்பட்டது.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 50 வயதுக்கும்  குறைவான பிந்து மற்றும் கனகதுர்கா என்ற இரு பெண்களும் சபரிமலை ஐயப்பன்  கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 3.45 மணிக்கு  பதினெட்டு படி ஏறாமல் கோவில் பின்புறம் வழியாகச்  சன்னிதானத்தை அடைந்த இவர்கள்  காவல்துறையினர்  பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலின்  ஐதீகமும்,  புனித தன்மையும் கெட்டு போய் விட்டதாகவும் ஐயப்ப பக்தர்கள் கருதினர். இதனால் கேரளாவில் பரபரப்பு  ஏற்பட்டது.

 

இதனையடுத்து பந்தளம் அரசகுடும்பத்தினர் உத்தரவின் பேரில் கோவிலை புனிதப்படுத்துவதற்காக சபரிமலை நடை மூடப்பட்டது. இதனையடுத்து தலைமை  தந்திரி மூலம் ஒரு  மணிநேர பரிகார பூஜைகள் நடைபெற்றதையடுத்து சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.