×

சபரிமலையில் தரிசனம் செய்த பெண்கள் யார்? எப்படி உள்ளே நுழைந்தனர்; முழு விவரம்!

சபரிமலை கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்த கனகதுர்காவும், பிந்துவும், அதற்காகக் காவல்துறை ஒத்துழைப்போடு ஒரு வாரமாகத் திட்டமிட்டு காத்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கேரளா: சபரிமலை கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்த கனகதுர்காவும், பிந்துவும், அதற்காகக் காவல்துறை ஒத்துழைப்போடு ஒரு வாரமாகத் திட்டமிட்டு காத்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 44 வயதான கனகதுர்கா உணவுப்பொருள் பொது விநியோகத்துறை ஊழியராகவும், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 42 வயது பிந்து கல்லூரி பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும்
 

சபரிமலை கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்த கனகதுர்காவும், பிந்துவும், அதற்காகக் காவல்துறை ஒத்துழைப்போடு ஒரு வாரமாகத் திட்டமிட்டு காத்திருந்ததாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

கேரளா: சபரிமலை கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்த கனகதுர்காவும், பிந்துவும், அதற்காகக் காவல்துறை ஒத்துழைப்போடு ஒரு வாரமாகத் திட்டமிட்டு காத்திருந்ததாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

 

44 வயதான கனகதுர்கா உணவுப்பொருள் பொது விநியோகத்துறை ஊழியராகவும்,  இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த
42 வயது பிந்து கல்லூரி பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.  இவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் 24-ம் தேதி சபரிமலை கோயிலுக்கு செல்ல முயற்சி செய்தபோது போராட்டக்காரர்களின் எதிர்ப்பால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மீண்டும் சபரிமலை செல்லும் முயற்சி:

மீண்டும் சபரிமலை செல்ல விருப்பம் தெரிவித்த கனகதுர்கா, பிந்து  இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க முடிவு செய்த காவல்துறை அதற்கான திட்டம் வகுத்தது.இருவரும் பெண் காவலர்களின் பாதுகாப்போடு ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். வேறு யாரையும் அவர்கள் தொடர்பு  கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்த திட்டத்தின் பொறுப்பாளராக கோட்டயம் எஸ்.பி. ஹரி சங்கர் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.காவல்துறையினர் கேரள உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைக் கேட்டபோது அடுத்த உத்தரவு வரும் வரை காத்திருக்க அறிவுறுத்தப்பட்டது.

ரகசிய பயணம்:

அதன்படி  புத்தாண்டு அன்று மாலையில் இரு பெண்களும் சபரிமலை செல்ல உரிய பாதுகாப்பு வழங்கும்படி கேரள அரசு உத்தரவிட்டது. உளவுத்துறை டிஐஜி உள்பட சில முக்கிய அதிகாரிகள், 20 காவலர்களிடமும்  இந்தப் பணி ரகசியமாக ஒப்படைக்கப்பட்டது.  சன்னிதானம் உள்ள பகுதிக்கு கனகதுர்காவும், பிந்துவும் நள்ளிரவில் 20 காவலர்களின் பாதுகாப்போடு டிராக்டர் செல்லும் பாதையில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஐந்தே  நிமிடத்தில் தரிசனம்:

கறுப்பு உடையில் தலையைச் சுற்றி சால்வை அணிந்தபடி கோயில் ஊழியர்கள் செல்லும் பாதை வழியே வேகமாக சென்ற அவர்கள் சரியாக அதிகாலை 3.38 மணிக்கு ஐயப்பனை தரிசித்துள்ளனர். ஐந்தே நிமிடத்தில் ஐயப்பனை தரிசித்துவிட்டு அதே வழியில் வெளியேறிச் சென்றுள்ளனர்.

 மாஸ் காட்டிய பினராயி விஜயன்:

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கேரள அரசு ஏற்கனவே கூறியிருந்தது. அதன்படி சபரிமலைக்கு இரண்டு பெண்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மாஸ் காட்டியுள்ளார்.