×

சபரிமலையில் கலவரம்: மோடியின் கேரள வருகை ரத்து!

சபரிமலை விவகாரத்தினால் கேரளாவில் சாதகமற்ற சூழல் நிலவுவதால் பிரதமர் மோடியின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரளா: சபரிமலை விவகாரத்தினால் கேரளாவில் சாதகமற்ற சூழல் நிலவுவதால் பிரதமர் மோடியின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 50 வயதுக்கும் குறைவான பிந்து மற்றும் கனகதுர்கா என்ற இரு பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். போராட்டக்காரர்களை மீறி பெண்கள் இருவர் ஐயப்பனை தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்து அமைப்பினர்
 

சபரிமலை விவகாரத்தினால் கேரளாவில் சாதகமற்ற சூழல் நிலவுவதால் பிரதமர் மோடியின்  கேரள பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேரளா: சபரிமலை விவகாரத்தினால் கேரளாவில் சாதகமற்ற சூழல் நிலவுவதால் பிரதமர் மோடியின்  கேரள பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 50 வயதுக்கும்  குறைவான பிந்து மற்றும் கனகதுர்கா என்ற இரு பெண்களும் சபரிமலை ஐயப்பன்  கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். போராட்டக்காரர்களை மீறி பெண்கள் இருவர் ஐயப்பனை தரிசனம் செய்தது  பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து இந்து அமைப்பினர் நடத்திய போராட்டத்தினால் கேரளாவில்  வன்முறை வெடித்தது. முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பினராயி விஜயனின் வாகனத்தைத் தாக்க முற்பட்டனர். இதனைத் தொடர்ந்து, முழு அடைப்பில் நூற்றுக்கணக்கான பேருந்துகள் பொதுச்சொத்துகள் சேதம் செய்யப்பட்டதுடன், பக்தர் ஒருவரும் கல்வீச்சில் உயிரிழந்தார். 

இந்நிலையில் பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியின் நாளை கேரள வருகை ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.