×

சபரிமலை விவகாரம் வரலாற்றில் மோசமானது: பினராயியை தாக்கிய மோடி

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வரலாற்றில் மிக மோசமானது எனப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். கொல்லம்: சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வரலாற்றில் மிக மோசமானது எனப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, கொல்லத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, கடந்த 4 ஆண்டுகளில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நாடாக இருந்த இந்தியா, வளர்ந்த நாடுகள் பட்டியலில் இணைந்துள்ளது. பின்தங்கிய
 

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வரலாற்றில் மிக மோசமானது எனப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

கொல்லம்: சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கை வரலாற்றில் மிக மோசமானது எனப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, கொல்லத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, கடந்த 4 ஆண்டுகளில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நாடாக இருந்த இந்தியா, வளர்ந்த நாடுகள் பட்டியலில் இணைந்துள்ளது. பின்தங்கிய பகுதிகளுக்கு போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆன்மிகம், மத நம்பிக்கைகளை ஒருபோதும் இடதுசாரி அரசு மதித்ததில்லை, சபரிமலை விவகாரத்தைப் பொறுத்தவரையில்,  கேரள அரசின் போக்கு, வரலாற்றில் மோசமானதாக  இடம்பெறும். கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரசும் பெயரளவில்தான் வேறு வேறு கட்சிகளே தவிர இளைஞர்களின் சக்தியை வீணடிப்பதில் இரண்டும் ஒன்றுதான்’ என்றார்.