×

சபரிமலை விவகாரம்… பெண்கள் நாளை மனித சங்கிலி போராட்டம்

சபரிமலையில் பெண்களின் உரிமைகளை நிலைநிறுத்த கோரி பெண்கள் நாளை மனித சங்கிலி போராட்டம் நடத்த இருக்கின்றனர். திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களின் உரிமைகளை நிலைநிறுத்த கோரி பெண்கள் நாளை மனித சங்கிலி போராட்டம் நடத்த இருக்கின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக இந்து அமைப்பினர் உள்ளிட்ட பலர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்திட கேரள அரசு தீவிர முனைப்போடு இருக்கிறது. இருப்பினும்
 

சபரிமலையில் பெண்களின் உரிமைகளை நிலைநிறுத்த கோரி பெண்கள் நாளை மனித சங்கிலி போராட்டம் நடத்த இருக்கின்றனர்.

திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களின் உரிமைகளை நிலைநிறுத்த கோரி பெண்கள் நாளை மனித சங்கிலி போராட்டம் நடத்த இருக்கின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக இந்து அமைப்பினர் உள்ளிட்ட பலர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்திட கேரள அரசு தீவிர முனைப்போடு இருக்கிறது. இருப்பினும் கோயிலுக்கு வரும் பெண்கள் பலர் போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இந்நிலையில், ஐயப்பன் கோயிலில் பெண்களின் உரிமைகளை நிலைநிறுத்திட வேண்டுமென வலியுறுத்தி பெண்கள் நாளை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நாளை மாலை 4 மணிக்கு தொடங்கும். ‘பெண்கள் சுவர்’ எனப்படும் இப்போராட்டம், கேரளாவின் வட எல்லையான காசர்கோடில் தொடங்கி, தலைநகர் திருவனந்தபுரம் வரை (620 கி.மீ) நடக்கிறது.