×

சபரிமலை விவகாரம்: பரிகார பூஜை செய்த தந்திரிக்கு எஸ்.சி, எஸ்.டி கமிஷன் நோட்டீஸ்!

50 வயதுக்கும் குறைவான பெண்கள் வழிபட்டதைத் தொடர்ந்து, சபரிமலையில் புனித பூஜை செய்த தந்திரிக்கு கேரள பட்டியலின மற்றும் பழங்குடியின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரளா: 50 வயதுக்கும் குறைவான பெண்கள் வழிபட்டதைத் தொடர்ந்து, சபரிமலையில் புனித பூஜை செய்த தந்திரிக்கு கேரள பட்டியலின மற்றும் பழங்குடியின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 50 வயதுக்கும் குறைவான பிந்து மற்றும் கனகதுர்கா என்ற இரு பெண்களும் கடந்த 2ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில்
 

50 வயதுக்கும்  குறைவான பெண்கள் வழிபட்டதைத் தொடர்ந்து,  சபரிமலையில் புனித பூஜை செய்த தந்திரிக்கு கேரள பட்டியலின மற்றும் பழங்குடியின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரளா: 50 வயதுக்கும்  குறைவான பெண்கள் வழிபட்டதைத் தொடர்ந்து,  சபரிமலையில் புனித பூஜை செய்த தந்திரிக்கு கேரள பட்டியலின மற்றும் பழங்குடியின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 50 வயதுக்கும்  குறைவான பிந்து மற்றும் கனகதுர்கா என்ற இரு பெண்களும் கடந்த 2ம் தேதி சபரிமலை ஐயப்பன்  கோவிலில் காவல்துறையினர்  பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கேரளாவில் பரபரப்பு  ஏற்பட்டது. இதையடுத்து கோவிலின்  ஐதீகமும்,  புனித தன்மையும் கெட்டு போய் விட்டதாக தலைமை  தந்திரி மூலம் ஒரு  மணிநேர பரிகார பூஜைகள் நடைபெற்றது.

இதையடுத்து   புனித பூஜை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. அது குறித்து தந்திரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவரது விளக்கத்தைக் கேட்டபின், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் ன தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கேரள பட்டியலின மற்றும் பழங்குடியின ஆணையம் இதுபற்றி ஆணையத்தில் விளக்கம் அளிக்க, தந்திரியை அழைத்திருந்தது. கடந்த 17 ஆம் தேதி அவர் ஆஜராகி இருக்க வேண்டும். அவர் வராததால், உங்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு அந்த ஆணையம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை உறுதி செய்த அந்த ஆணையத்தின் உறுப்பினர், எஸ். அஜய்குமார், சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பெண்களில் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். தந்திரி, கோயிலை புனிதப்படுத்தும் பூஜை செய்தது, தீண்டாமையைத்தான் காட்டுகிறது ன்று முகநூலில் தெரிவித்துள்ளார்.