×

சந்திரயான்-2 விண்கலத்தின் செயல்பாடு 95 சதவீதம் வெற்றி: இஸ்ரோ தகவல்!

சந்திரயான்-2 விண்கலத்தின் செயல்பாடு 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது 5 சதவீத தோல்வியே பெங்களூரு: சிக்னலை இழந்த லேண்டர் விக்ரமை, நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலம் படம் பிடிக்கலாம், இதனால், லேண்டரின் நிலை பற்றி தெரியவரும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்த சந்திரயான்-1 திட்டத்தைத் தொடர்ந்து, 978 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சந்திரயான் – 2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. இந்த விண்கலமானது கடந்த
 

சந்திரயான்-2 விண்கலத்தின் செயல்பாடு 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது.  விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது 5 சதவீத தோல்வியே

பெங்களூரு:  சிக்னலை இழந்த லேண்டர் விக்ரமை, நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலம் படம் பிடிக்கலாம், இதனால், லேண்டரின் நிலை பற்றி தெரியவரும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்த சந்திரயான்-1 திட்டத்தைத் தொடர்ந்து, 978 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சந்திரயான் – 2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. இந்த விண்கலமானது  கடந்த ஜூலை 22ஆம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலமானது  ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி நிலவின் பாதைக்குத் திருப்பி விடப்பட்டது. இதைத் தொடர்ந்து நிலவின் சுற்று வட்டப் பாதையில் சந்திரயான்-2-வின் வேகம் படிப்படியாகக்  குறைக்கப்பட்டு,  கடந்த 2ஆம் தேதி ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் விக்ரம் பிரிக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி நிலவின் பாதைக்குத் திருப்பி விடப்பட்டது. இதைத் தொடர்ந்து நிலவின் சுற்று வட்டப் பாதையில் சந்திரயான்-2-வின் வேகம் படிப்படியாகக்  குறைக்கப்பட்டு,  கடந்த 2ஆம் தேதி ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் விக்ரம் பிரிக்கப்பட்டது.

 

இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை மணிக்கு விக்ரம் லேண்டர் தரையிறக்கும் பணி தொடங்கப்பட்டது. இதை பார்வையிடப் பிரதமர் மோடி, மாணவர்கள் பலர் வருகை புரிந்திருந்தனர். ஆனால்  எதிர்பாராத விதமாக லேண்டரில்  இருந்து சிக்னல்  வரவில்லை. இதனால் அதன் தகவல் தொடர்பு  துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. இதனால் விஞ்ஞானிகள் வருத்தமடைந்தனர். அவர்களுக்குப்  பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். 

இந்நிலையில், லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டாலும், ஆர்பிட்டரை நாம் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க முடியும் என்று  விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து தெரிவித்துள்ள இஸ்ரோ, சந்திரயான்-2 விண்கலத்தின் செயல்பாடு 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது.  விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது 5 சதவீத தோல்வியே. அதே நேரத்தில் ஆர்பிட்டர் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கின்றது. இந்த ஆர்பிட்டரானது நிலவை தொடர்ந்து ஓராண்டுக்குப் படம்பிடித்து அனுப்பும். அதுமட்டுமில்லாமல், தகவல் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரையும் ஆர்பிட்டரால் படம்பிடிக்க முடியும் இதன் மூலம் லேண்டரின் நிலை பற்றி உறுதியான தகவல்கள் கிடைக்கும்’ என்று கூறியுள்ளனர்.