×

சந்திரசேகரின் தற்கொலைக்கு கிரிக்கெட்தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா?

ஏற்கெனவே வங்கியில் வாங்கியிருந்த 4 கோடி ரூபாய் கடன், தொடர்ந்து அணியை நடத்துவதில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, திருமணமாகாத இரு மகள்களின் எதிர்காலம் குறித்த கவலை என நெருக்கடியில் சிக்கிய சந்திரசேகர் அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப்பில் சென்ற பந்தை சிக்ஸ் அடிக்க முயற்சித்து அவுட்டாகியிருக்கிறார். நியூசிலாந்து பவுலர் போல்ட் எவ்வளவு வேகமா ஓடிவந்து பந்தைப் போட்டாலும், கோலி அசால்ட்டா அடிப்பான், பாவம் போல்ட் நொந்துப் போய்ட்டான் என எல்லா கிரிக்கெட் வீர்ர்களையும் ஒருமையில் விளித்து கிரிக்கெட் வர்ணனை
 

ஏற்கெனவே வங்கியில் வாங்கியிருந்த 4 கோடி ரூபாய் கடன், தொடர்ந்து அணியை நடத்துவதில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, திருமணமாகாத இரு மகள்களின் எதிர்காலம் குறித்த கவலை என நெருக்கடியில் சிக்கிய சந்திரசேகர் அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப்பில் சென்ற பந்தை சிக்ஸ் அடிக்க முயற்சித்து அவுட்டாகியிருக்கிறார்.

நியூசிலாந்து பவுலர் போல்ட் எவ்வளவு வேகமா ஓடிவந்து பந்தைப் போட்டாலும், கோலி அசால்ட்டா அடிப்பான், பாவம் போல்ட் நொந்துப் போய்ட்டான் என எல்லா கிரிக்கெட் வீர்ர்களையும் ஒருமையில் விளித்து கிரிக்கெட் வர்ணனை செய்யும் ஸ்ரீகாந்த் இருக்கும் அதே இட்த்தில் இருந்துந்தான் வி.பி. சந்திரசேகரும் வர்ணனை செய்வார், ஆனால் மரியாதையாக, தரமாக. இந்திய அணிக்காக 7 சர்வதேச போட்டிகளில் விளையாடிவர், இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக இருந்தவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல் இயக்குநராக இருந்தவர் என வாழ்க்கை முழுவதும் கிரிக்கெட் கிரிக்கெட் என சுற்றி வந்தவருக்கு அந்த கிரிக்கெட்டாலேயே முடிவும் வாய்த்துள்ளது. உலகின் மிக பணக்கார கிரிக்கெட் கிளப்பான பிசிசிஐவசம் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சந்திரசேகரின் தற்கொலைக்கும் கிரிக்கெட்டே காரணமாகிப் போனது எப்படி தெரியுமா?

பொதுவாகவே கிரிக்கெட் வீர்ராக வேண்டுமானாலும் சரி, கிரிக்கெட் அணிகளை வாங்க வேண்டுமானாலும் சரி, இந்தியாவில் அது மிகப்பெரிய பணக்கார்ர்களுக்கு மட்டுமே சாத்தியம். தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடங்கப்பட்டபோது முதலில் திருவள்ளூர் அணியை வாங்கிய சந்திரசேகர், 2 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி வீரன்ஸ் அணியை 4 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். அவ்வளவும் சொந்தப் பணம், அல்லது வங்கிகளில் வாங்கிய கடன். தினத்தந்தி மாதிரி மிகபெரும் பொருளாதார பின்புலம் உள்ளவர்கள் ஒரு அணியை வாங்குவதற்கும், கிரிக்கெட் அனுபவம் மட்டுமே கொண்ட சந்திரசேகர் ஒரு அணியை வாங்குவதற்கும் வித்தியாசம் இல்லாமலா போகும்?

அணிக்காக வீரர்களை ஏலம் எடுப்பதற்கு செலவிடப்படும் தொகை, போட்டிகள் நடைபெறும்போது ஒரு வீரருக்கு நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் படி, வீரர்கள் தங்குவதற்கான வசதி, அணி வீரர்களின் போக்குவரத்திற்காக வால்வோ பஸ், வெளியூர்களுக்கு சென்றால் தங்குவது மற்றும் உணவுக்கான ஹோட்டல் பில் என செலவு கையைமீறிச் சென்றபோது, வி.பி.சந்திரசேகர் கடன் பிரச்சனையில் சிக்கியிருக்கிறார். ஏற்கெனவே வங்கியில் வாங்கியிருந்த 4 கோடி ரூபாய் கடன், தொடர்ந்து அணியை நடத்துவதில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, திருமணமாகாத இரு மகள்களின் எதிர்காலம் குறித்த கவலை என நெருக்கடியில் சிக்கிய சந்திரசேகர் அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப்பில் சென்ற பந்தை சிக்ஸ் அடிக்க முயற்சித்து அவுட்டாகியிருக்கிறார். RIP Chandrasekar