×

சந்திரசேகர ராவை மோடி மிரட்டுகிறார்: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை பிரதமர் மோடி மிரட்டி அவரை பணிய வைக்கிறார் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். விஜயவாடா: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை பிரதமர் மோடி மிரட்டி அவரை பணிய வைக்கிறார் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கே.சந்திரசேகரராவ் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் அவரை மிரட்டி பிரதமர் மோடி பணிய வைக்க பார்க்கிறார். சந்திரசேகரராவும் ஊழல் வழக்கில் இருந்து
 

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை பிரதமர் மோடி மிரட்டி அவரை பணிய வைக்கிறார் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

விஜயவாடா: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை பிரதமர் மோடி மிரட்டி அவரை பணிய வைக்கிறார் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கே.சந்திரசேகரராவ் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் அவரை மிரட்டி பிரதமர் மோடி பணிய வைக்க பார்க்கிறார். சந்திரசேகரராவும் ஊழல் வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் அரசின் சாதனைகளால் பொறாமை அடைந்த மோடியும், ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டியும், சந்திரசேகரராவை தூண்டி விட்டுள்ளனர்.தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் தெலுங்கு தேசம் கூட்டணி வைத்தது. அதற்கு நான் ஒரு சந்திர்ப்பவாதி என சந்திரசேகரராவ் தெரிவித்திருந்தார். அதை நான் மறுக்கிறேன்.

ஆனால் சந்திரசேகரராவ் ஒன்றை மறந்து விடக்கூடாது. தெலங்கானா மாநிலம் உருவாக மத்திய அரசு ஒப்புக் கொண்டால் தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்க தயார் என அவர் வாக்குறுதி அளித்தார் என்றார்.