×

சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்: 70 சதவீத வாக்குகள் பதிவு

சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது ராய்பூர்: சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வந்தது. இதனைத்தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலத்தின் 18 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 12-ம் தேதி (இன்று) முதல் கட்டமாகவும்,
 

சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

ராய்பூர்: சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வந்தது.

இதனைத்தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலத்தின் 18 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 12-ம் தேதி (இன்று) முதல் கட்டமாகவும், எஞ்சிய 72 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக நவம்பர் 20-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

அதேபோல், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளையும் அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம், ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை டிசம்பர் மாதம் 11-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்தது.

அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதாலும், பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்திருந்ததாலும் வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துணை ராணுவத்தினர், போலீசார் என சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த பாதுகாப்புக்கு இடையே காலை முதல் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில், சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.