×

கோவா மியூசிக் ஃபெஸ்டிவலில் போதையில் ஆடி கொண்டிருந்த இளைஞர்கள்… திடீரென்று சுருண்டு விழுந்து இறந்த பரிதாபம்!

அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். வடக்கு கோவா மாவட்டத்தின் வாகடோர் கடற்கரை கிராமத்தில் ஆண்டுதோறும் சன்பர்ன் எலக்ட்ரானிக் டான்ஸ் மியூசிக் ஃபெஸ்டிவல் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இதில் கலந்துகொள்ள வந்துள்ளனர். அப்போது போதையில் இருவரும் டான்ஸ் மியூசிக் ஃபெஸ்டிவலில் துள்ளிக்குதித்து நடனம் ஆடிக்கொண்டிருந்த நிலையில் இருவரும் திடீரென மயங்கி விழுந்துள்ளனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரையும் மீட்டு மாபூசா நகரின் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர்கள் ஆந்திராவை சேர்ந்த சாய் பிரசாத் மற்றும் வெங்கட் என தெரியவந்துள்ளது. இவர்கள் அதிகமாக போதையில் இருந்ததால் இறந்தார்களா? அல்லது மாரடைப்பு
 

அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

வடக்கு கோவா மாவட்டத்தின் வாகடோர் கடற்கரை கிராமத்தில் ஆண்டுதோறும்  சன்பர்ன் எலக்ட்ரானிக் டான்ஸ் மியூசிக் ஃபெஸ்டிவல் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இதில் கலந்துகொள்ள வந்துள்ளனர். 

 அப்போது போதையில் இருவரும்  டான்ஸ்  மியூசிக் ஃபெஸ்டிவலில்   துள்ளிக்குதித்து நடனம் ஆடிக்கொண்டிருந்த நிலையில் இருவரும் திடீரென மயங்கி விழுந்துள்ளனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரையும் மீட்டு  மாபூசா நகரின் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர்கள் ஆந்திராவை சேர்ந்த சாய் பிரசாத் மற்றும் வெங்கட் என தெரியவந்துள்ளது. இவர்கள் அதிகமாக போதையில் இருந்ததால் இறந்தார்களா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டதா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே விழாவின் இணை அமைப்பாளர்களில் ஒருவரான ஷைலேஷ் ஷெட்டி, இதுகுறித்து தனக்கு தெரியாது. இந்த சம்பவத்திற்கு வருந்துகிறேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.