×

கொரோனாவை பற்றி அறிந்துகொள்ள புதிய வெப்சைட்!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸால் 119 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் பாதிப்பு பற்றி அறிந்துகொள்ள புதிய இணையதளம் ஒன்றை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு நாட்டிலும்
 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸால் 119 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் பாதிப்பு பற்றி அறிந்துகொள்ள புதிய இணையதளம் ஒன்றை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு நாட்டிலும் கொரொனா பாதிப்பு நிலை, மரணம், குணமடைந்தவர்கள் ஆகிய விவரங்கள் அடங்கிய பட்டியல்கள் உட்பட அனைத்து செய்திகளையும் https://bing.com/covid தளத்தில் பெறலாம்.