×

கொரோனாவின் கோரத்தாண்டவம்… வீடியோ காலில் நடந்த திருமணம்!

கொரோனாவால் கல்யாணம் முதல் இறுதி சடங்கு வரை வீடியோ காலிலேயே நடந்து வருகிறது. கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கும் சூழல் நிலவுகிறது. அதுமட்டுமில்லாமல் ரயில், பேருந்து என அனைத்து சேவையும் முடக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக பலர் சுப நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா அதிகம் பரவி வரும் பகுதியான
 

கொரோனாவால் கல்யாணம் முதல் இறுதி சடங்கு வரை வீடியோ காலிலேயே நடந்து வருகிறது. 

கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கும் சூழல் நிலவுகிறது. அதுமட்டுமில்லாமல் ரயில், பேருந்து என அனைத்து சேவையும் முடக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக பலர் சுப நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்து வருகின்றனர். 

இந்நிலையில் கொரோனா அதிகம் பரவி வரும் பகுதியான மகாராஷ்டிராவில், இளம் தம்பதி வீடியோ கால் மூலம் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். அவுரங்காபாத் என்னும் பகுதியில் இஸ்லாமிய முறைப்படி நடந்த அந்த திருமணத்துக்கு மணமகன் மட்டும் வந்திருக்கிறார். மேலும் மத குருமார்கள் வந்துள்ளனர். அதனையடுத்து வீடியோ கால் மூலம் மணமகள் சம்மதத்தை தெரிவிக்க, அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த கொரோனாவால் கல்யாணம் முதல் இறுதி சடங்கு வரை வீடியோ காலிலேயே நடந்து வருகிறது.