×

கொரோனாவால் வியாபாரம் 6 மாதம் படுத்தாலும்…. முகேஷ் அம்பானி நிறுவனத்தின் கடன் உயர வாய்ப்பில்லையாம்….

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வர்த்தகம் 6 மாதம் நெருக்கடியை சந்தித்தாலும், பங்கு விற்பனை தாமதம் ஆனாலும் இந்த நிதியாண்டில் அந்நிறுவனத்தின் கடன் உயர வாய்ப்பில்லை என மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. இந்தியாவின் மெகா கோடீஷ்வரர் முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடன் சுமையை முழுமையாக குறைத்து கடன் இல்லாத நிறுவனமாக மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது எண்ணெய் மற்றும் ரசாயன வர்த்தக துறையில்
 

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வர்த்தகம் 6 மாதம் நெருக்கடியை சந்தித்தாலும், பங்கு விற்பனை தாமதம் ஆனாலும் இந்த நிதியாண்டில் அந்நிறுவனத்தின் கடன் உயர வாய்ப்பில்லை என மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மெகா கோடீஷ்வரர் முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடன் சுமையை முழுமையாக குறைத்து கடன் இல்லாத நிறுவனமாக மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது எண்ணெய் மற்றும் ரசாயன வர்த்தக துறையில் 20 சதவீத பங்குகளை சவுதியின் அராம்கோ நிறுவனத்துக்கு விற்பனை செய்யும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மேலும் ஜியோ நிறுவனத்தின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை பேஸ்புக் நிறுவன வாங்க ஆர்வம் காட்டுவதாகவும் தகவல். இவற்றின் வாயிலாக கிடைக்கும் பணத்தை கொண்டு கடனை அடைக்க முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் லாக்டவுனால் கச்சா எண்ணெய் விலை மற்றும் தேவை குறைந்துள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் சில்லரை விற்பனை பிரிவில் பேஷன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான விற்பனையும்  மந்தநிலையில் உள்ளது. தொலைத்தொடர்பு முதலீடுகளை பணமாக்குவதில் வேகம் குறைவு மற்றும் முதலீடடு சுழற்சியின் பின்னர் ஒப்பீட்டளவில் கடன் அதிகமாக உள்ளது.

இதனால் இந்த ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடன் அதிகரிக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் மோர்கன் ஸ்டான்லி தனது அறிக்கையில், கொரோனா வைரஸ் நிலைமை ஆறு மாதங்கள் நீடித்தாலும், பின்னர் மெதுவாக மீட்கப்பட்டால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடன் நிலையானதாக இருக்கும். இந்த நிதியாண்டில் ரிலையன்ஸ இண்டஸ்ட்ரீஸ் முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் நெகிழ்வுத்தன்மையை கொண்டுள்ளது. இதன் மூலம் பண ஒதுக்கீட்டை 30 சதவீதம் வரை குறைக்க முடியும். அதேசமயம் கியாஸ் உற்பத்தி, தொலைத்தொடர்பு அலைக்கற்றை புதுப்பித்தல் மற்றும் பாரமரித்தல் ஆகியவற்றுக்காக மூலதன செலவினங்களை அந்நிறுவனம் மேற்கொண்டுதான் ஆக வேண்டும் என தெரிவித்துள்ளது.