×

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது…. ஒரு வயது குழந்தை உள்பட மொத்தம் 165 பேர் பலி…..

மாநிலங்களின் அண்மைகால அறிக்கையின்படி, நம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. மேலும் ஒரு வயது குழந்தை உள்பட மொத்தம் 165 பேர் தொற்றுநோய்க்கு பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் எதிர்பார்த்ததை காட்டிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் குறித்த பயம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த தொற்று நோய் வேகமாக பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் அவை எல்லாம் பலனை
 

மாநிலங்களின் அண்மைகால அறிக்கையின்படி, நம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. மேலும் ஒரு வயது குழந்தை உள்பட மொத்தம் 165 பேர் தொற்றுநோய்க்கு பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் எதிர்பார்த்ததை காட்டிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் குறித்த பயம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த தொற்று நோய் வேகமாக பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் அவை எல்லாம் பலனை கொடுக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது.

கடந்த 5 தினங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. மாநிலங்களின் அண்மைகால அறிக்கையின்படி, நேற்றைய நிலவரப்படி, கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,325ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2ம் தேதியன்று, நம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 2,580ஆக இருந்தது. 

நேற்று மட்டும் புதிதாக 568 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 14 மாத குழந்தை உள்பட மொத்தம் 25 பேர் இறந்துள்ளனர். இதனையடுத்து இதுவரை கொரோனாவுக்கு உயிர் இழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது.