×

கொரோனா வைரஸ்: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களைக் கண்காணிக்க குஜராத் அரசு மொபைல் செயலி அறிமுகம்

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களைக் கண்காணிக்க குஜராத் அரசு மொபைல் செயலி அறிமுகம் செய்துள்ளது. சூரத்: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களைக் கண்காணிக்க குஜராத் அரசு மொபைல் செயலி அறிமுகம் செய்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை குஜராத் அரசு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி வருகிறது. அவர்களின் இயக்கத்தை கண்காணிக்கக் கூடிய மொபைல் ஆப்-ஐ குஜராத் அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அகமதாபாத், காந்திநகர், வதோதரா மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களில் புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) அடிப்படையில்
 

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களைக் கண்காணிக்க குஜராத் அரசு மொபைல் செயலி அறிமுகம் செய்துள்ளது.

சூரத்: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களைக் கண்காணிக்க குஜராத் அரசு மொபைல் செயலி அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை குஜராத் அரசு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி வருகிறது. அவர்களின் இயக்கத்தை கண்காணிக்கக் கூடிய மொபைல் ஆப்-ஐ குஜராத் அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அகமதாபாத், காந்திநகர், வதோதரா மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களில் புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) அடிப்படையில் இந்த ஆப் பயன்பாடு தொடங்கப்பட்டது என்று முதன்மை சுகாதார செயலாளர் ஜெயந்தி ரவி தெரிவித்தார்.

அத்துடன் ஏற்கனவே சூரத் நகரத்தில் 3,600 வீட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களை இவ்வாறு முனிசிபல் கார்ப்பரேஷன் கண்காணித்து வருவதாக அவர் கூறினார். தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து விலகிச் சென்றால் அதிகாரிகளை எச்சரிக்கும் வகையில் ஜியோ ஃபென்சிங் பொருத்தப்பட்டிருக்கிறது. இது வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட சுமார் 20,000 நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க உதவும் என்று அவர் கூறினார்.